ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி | Jathagam Kattam From Date of Birth in Tamil

Jathagam Kattam From Date of Birth in Tamil

ஜாதக கட்டம் பலன்கள் | Jathagam Kattam Palangal in Tamil

ஜாதக கட்டம்: ஏதேனும் நல்ல காரியம் செய்வதற்கு முன் வீட்டில் உள்ளே பெரியவர்கள் முதலில் பார்ப்பது இந்த ஜாதகத்தை தான். பெரும்பாலானோர் ஆன்மீகத்தை நம்பியே எந்த ஒரு நல்ல காரியத்தினையும் தொடங்குவார்கள். ஆன்மீகத்தில் ஜாதகம் என்று சொல்லப்படுவது ஒரு நபருக்கான தனித்துவம் பெற்ற வரைப்படம். ஜாதகத்தை வைத்து அவருடைய கடந்த காலம், நிகழ்காலம், வரக்கூடிய எதிர்காலத்தினை முன்கூட்டியே கணித்து சொல்லிவிடலாம். ஒவ்வொரு ஜாதக கட்டத்திலும் ஒவ்வொரு வீட்டு பலன்கள் உள்ளன. ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவத்தினை குறிக்கிறது. ஆன்மீக ஜோதிடத்தில் மிக அடிப்படையாகப் பார்க்கப்படுவது 12 ராசிகள் தான். அந்த ராசிக்கான அமைப்பு ஜாதக கட்டமாக உள்ளது. ஒவ்வொருவரின் ஜாதகத்தில், அவர் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைப் பொருத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் ராசிக்கட்டம் எப்படி இருக்கும், ஜாதகத்தை எப்படி படிக்க வேண்டும், ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களில் என்னென்ன அடிப்படை பலன்கள் உள்ளன என்று விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

ஜாதகத்தை எப்படி படிக்க வேண்டும்:

  • உங்களுடைய ஜாதக குறிப்பேட்டில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும். அந்த வீட்டினை தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைப்பார்கள். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.
  • மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்குமே தனி தனியாக ஒரு சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் மாற்றம் அடையாமல் இருக்கும்.
  • கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.
  • கடைசியாக ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
  • இதுதான் ஜாதகத்தின் முக்கிய அடிப்படை விஷயம் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து உங்கள் ஜோதிட அறிவை பயன்படுத்தி ஜோதிடத்தில் உள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து கூற வேண்டும்.

ஜாதகக்தில் ராசிக்கட்டம் எப்படி இருக்கும் | jathagam kattam parpathu eppadi in tamil:

 ஜாதக கட்டம் பலன்கள்

ராசி என்பது வான் மண்டலத்தில் 360 பாகை கொண்ட ஒரு நீள்வட்டம் கொண்ட வடிவமைப்பு ஆகும். இந்த வடிவமைப்பு 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. வட்ட வடிவில் அமைப்பதை விட கட்டமாக அமைப்பதால் ஜாதக கட்டம் அனைவருக்கும் எளிமையாக புரியும். இந்த கட்டத்தை தான் ஜாதகத்தில் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம். இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் இன்ன பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன.

இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலை மாற்றம் பெறாமல் இருக்கும். இந்தக் கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு எண்கள் வரை உள்ளது. ஜாதகத்தில் முதலாம் வீடு என்று சொல்லக்கூடியது லக்னம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படுகின்றன.

ஒருவர் பிறந்த ஜாதகம் மூலம் அவர் பிறந்த நேரத்தில் ஜோதிடத்தில் சொல்லப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை இதனை வைத்து தெரிந்துக்கொள்ள முடியும். ஜாதகம் என பிரபலமாக அறியப்படும் இது, ஒரு நபரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. உங்களுடைய ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரக நிலைகளின் அமைப்பைக் குறிக்கின்றது. அந்த அமைப்பிற்கேற்ப நமது வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது.

ஜாதக கட்டம் | jathagam kattam:

முதலாம் பாவம்: முதலாம் வீட்டினை லக்ன பாவம் என்று கூறுவார்கள். இது  ஜாதகக்காருடைய உடல் வாகு, அழகு, நிறம், ரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலை அமைப்பு, வாழ்க்கை அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகளை குறிக்கும். மகிழ்ச்சியை அனுபவித்தல், அவருடைய  ஆயுள் காலத்தை முற்றிலும் குறிக்கும் பாவமாகும். ஒருவருக்கு லக்கினம் பலமாக இருந்தால் தான் அவருக்கு குறைவில்லை யோகம், நீண்ட ஆயுளும் கிடைக்கும். இதற்கு லக்கின பாவமும், லக்கினாதிபதியும் பலமாக இருத்தல் வேண்டும்.

இரண்டாம் பாவம்: வீடு, வாக்கு ஸ்தானம் என அழைக்கப்படுவது இரண்டாம் பாவம். ஒரு ஜாதகத்தினரின் குடும்பம், தனம், கல்வி, வாக்கு, நேத்திரம், பேச்சுத் திறன், கலை திறன், அவர்களிடம் இருக்கும் ஆர்வம், நடை உடை பாவனை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, முகம், நாக்கு, உணவு ஆகியவற்றை குறிக்கும். இதன் அடிப்படியில் அவருடைய உண்மை பேசுதல் குணமும், பொய் பேசுதல் குணமும், அவர்களிடம் இருக்கும் கோப தன்மை வெளிப்படும். அதோடு அவரின் வலது கண், வஞ்சக நெஞ்சம் கொண்டவரா, பெருந்தன்மை உடையவரா என்பதை தெரிந்துகொள்ளும் பாவம். வாக்கு ஸ்தானம் சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். வீடு, மனை வாங்கக் கூடிய தன ஸ்தானமாகவும் இருக்கிறது.

மூன்றாம் பாவம்: மூன்றாம் பாவமானது பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல், தோல்வி இல்லாமல் எதிலும் வெற்றி கொள்ளும் திறன், இசையில் அதிக ஆர்வம் கொள்ளுதல், தொழில் அமையக்கூடிய நிலை, வீரியம், அவரின் ஆண்மை திறன் அதாவது தைரியம், துணிவு, பயமின்றி செயலாற்றும் மனப்பாங்கு உள்ளிட்டவை மூன்றாம் பாவத்தில் அடங்கும். மூன்றாம் பாவம் காது சார்ந்த நோய், காது கேளாத தன்மை, ஆடை, ஆபரணம் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வைரம் அதிகமாக சேரும் யோகத்தினை குறிக்கிறது. அடுத்தவர்களிடம் கீழ்ப்பணிந்து பணியாற்றும் நிலை ஏற்படுதல், அதனால் பெறும் நன்மைகள் குறிக்கும். இது சகோதர ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி?

 

நான்காம் பாவம்: நான்காம் பாவத்தினை மாதுர் ஸ்தானம் (தாய்) என குறிக்கிறது. ஜாதகருக்கு உயர்ந்த நிலை கல்வி, புதிதாக வாகனம் வாங்குதல், வீட்டில் சுப காரியம் நடத்தல், தொழில், தாயின் உறவு, தாயின் உடல் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை அடக்கியதாகும். அதோடு ஒருவர் புகழ் பெறுதல், புதையல் கிடைத்தல் போன்ற யோகம், சிறுதூர, வெளிநாட்டு பிரயாணம், பால், பால் பொருட்கள், ஆன்மிக பயணம் உள்ளிட்டவை அடங்கும். பொதுவாக இந்த நான்காம் பாவம் வீட்டை பற்றிய சுகத்தை மையமாக கொண்டுள்ளது.

ஐந்தாம் பாவம்: ஐந்தாம் பாவமானது புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என குறிப்பிடப்படும் பாவம் இது. தாய் வழி உறவு, மாமன்மார்களின் உறவு, செல்வம், பூர்வ புண்ணியங்கள் அதாவது கடந்த காலத்தில் செய்து வந்த நன்மை, தீமைகளை அடிப்படையாக கொண்ட பலன்கள். மொழியில் தேர்ச்சி, மந்திரங்கள், வேதங்கள் அறியும் திறமை, உயர் கல்வி பெறுதல், அறிவுத்திறன், அனுபவ அறிவு, பேச்சாற்றல், சொற்பொழிவு செய்தல், பெண்கள் கர்ப்பமாதல் ஆகியவை குறிக்கும். 5 ஆம் பாவத்தையும், அதில் குரு இருக்கும் பலத்தை பொருத்து குழந்தை செல்வத்தை கண்டறியலாம். 5 ஆம் பாவத்தையும், அதில் புதன் இருக்கும் பலத்தை பொருத்து ஒருவர் கல்வி பெறும் தகுதி, சொற்பொலிவாற்றும் தகுதியை அறியலாம்.

ஆறாம் பாவம்: ஆறாம் பாவமானது ரோக ஸ்தானம் / நோய் ஸ்தானம் என குறிப்பிடப்படுகின்றது. இந்த பாவமானது ஜாதககாரர் எந்த நோயினால் பாதிப்பு அடைவார், பகைவர்களால் ஏற்படக்கூடிய துன்பம், ஆயுதத்தினால் உண்டாகக்கூடிய  ஆபத்து, வலி, காயம் சண்டை, யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், பொருட்கள் காணாமல் போதல், நீர், நெருப்பால் ஆபத்து, ஏதேனும் விலங்குகளால் ஆபத்து உண்டாகுதல் போன்றவை அடங்கும். உடல் சோர்வு, சிறைபடுதல், உயர் பதவியை அடைதல், கால்நடைகள் பற்றிய அறிவு ஏற்படுதல் போன்றவை ஆறாம் பாவத்தை சேர்ந்ததாகும்.

ஏழாம் பாவம்: ஜாதக கட்டத்தில் ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், மரணத்தை குறிப்பதாக இருக்கிறது. இங்கு தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது அவைகளின் பார்வை பலம் இருந்தாலோ திருமணத்தில் சில தடை ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்காது. மரணம் சாதாரணமாக இருக்காது.

எட்டாம் பாவம்: ஜாதகத்தில் எட்டாம் கட்டம் ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கிறது. எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து அவர்களுக்கு பலன்கள் கிடைக்கும். எட்டாம் வீட்டில் சனி மற்றும் குரு இருந்தால் தீர்காயுள் அந்த ராசியினருக்கு கிடைக்கும்.

ஒன்பதாம் பாவம்: ஜோதிடத்தில் ஒன்பதாம் கட்டம் ராசியினருடைய தந்தையை குறிக்கிறது. இங்கு தீய கிரகங்கள் இருந்தால் தந்தையுடன் தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

பத்தாம் பாவம்: பத்தாம் கட்டம் கர்மஸ்தானத்தை குறிக்கிறது. கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவை பத்தாம் பாவத்தில் இடம் பெற்றுள்ளது. பத்தில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். உதாரணத்திற்கு ராசியாதிபதி லக்னத்தில் இருந்தால் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். மற்றவர்களை நம்பாமல் தன்னுடைய சொந்தக் காலில் நிற்பதை விரும்புவார்கள்.

பதினோராம் பாவம்: பதினோராம் கட்டத்தில் இருக்கும் கிரகம் அல்லது ராசியாதிபதி சரியாக அமையவில்லை என்றால் தான் சம்பாரிக்கும் பணம் அனைத்தும் வீண் செலவுகளாகிவிடும். ஏனெனில் இது தான் லாபஸ்தானம் ஆகும்.

பன்னிரெண்டாம் பாவம்: பன்னிரெண்டாம் கட்டம் மோட்சஸ்தானம் ஆகும். விரயம், நஷ்டம், சிறை தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை இந்த கட்டம் குறிக்கும். பன்னிரெண்டில் அமரும் கிரகங்கள் பொறுத்து பலன் இருக்கும். உதாரணத்திற்கு சனி பகவான் வந்து அமர்ந்தால் பாவங்கள் செய்பவராக இருப்பார்கள். ராசியினருக்கு நஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்