TV Vaikum Thisai in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் ஆன்மீக நண்பர்களுக்காக ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகின்றோம். அதாவது நம் வீட்டில் டீவியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் டிவி என்பது கண்டிப்பாக இருக்கும். அதுபோல இன்றைய காலகட்டத்திலும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.
அப்படி ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள், எதை செய்தாலும் அதை ஜோதிட சாஸ்திரப்படி தான் செய்வார்கள். காரணம் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதால் அவர்களுக்கு நன்மைகள் கிடைப்பதாக உணருகிறார்கள். அதனால் தான் வீட்டில் தொடங்கி தொழில் செய்யும் இடம் வரை ஒவ்வொரு பொருளும் வாஸ்து சாஸ்திரப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி ஒவ்வொரு பொருளும் இருந்தால் தான் நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக டீவியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்கள் வீட்டில் வாஸ்துப்படி சாவியை இந்த திசையில் வைக்கக்கூடாது
டிவி வைக்கும் திசை எது..?
பொதுவாக நம் வீட்டில் எந்த பொருளாக இருந்தாலும் அதை வாஸ்து சாஸ்திரப்படி தான் வைக்க வேண்டும். வீடு கட்டுவது மட்டுமின்றி, வீட்டில் வைக்க கூடிய பொருட்களுமே வாஸ்து சாஸ்திரப்படி தான் வைக்க வேண்டும். அப்படி நம் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் பொருள் தான் டீவி. எனவே டீவியை நம் வீடுகளில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று யோசிப்போம். அதனால் இப்போது டீவி வைக்கும் வாஸ்து திசையை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
திசைகள்:
- பொதுவாக நீங்கள் டீவியை உங்கள் வீடு ஹாலில் வைக்கிறீர்கள் என்றால், அதை தென்கிழக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது.
- மேலும் டீவியை வடக்கு, மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக இருக்கும்.
- அதேபோல டீவியை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வைக்க கூடாது. ஒரு வேலை நாம் நமக்கே தெரியாமல் வைத்தால் அது வீட்டின் இயக்கத்தை தடை செய்கிறது. மேலும் நல்ல காரியங்கள் கைகூடி வராது. அதனால் டீவியை சரியான திசையில் மாட்டுவது நல்லது.
- அது போல டீவியை ஹாலை தவிர மற்ற இடங்களில் மாற்ற கூடாது. அதாவது படுக்கை அறை, சமையலறை, டைனிங் டேபிள் இருக்கும் இடம் போற்றவற்றில் மாற்ற கூடாது. மீறி மாற்றினால், தம்பதிகளுக்கு இடையே சண்டைகளை உண்டாக்கும். அதனால் ஹாலை தவிர மற்ற இடங்களில் டீவியை மாட்டி வைக்காதீர்கள்.
- அது போல ஒரு வீட்டில் ஒன்றுக்கு மூன்று டீவிகளை உபயோகிக்க கூடாது. மீறி உபயோகித்தால், மன கஷ்டம், பணக் கஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
- அது போல பூஜை அறைக்கு அருகிலும் டீவியை வைக்கக்கூடாது. மேலும் குழைந்தைகள் இருக்கும் அறை மற்றும் கழிவறைக்கு அருகிலும் டீவியை வைக்க கூடாது வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வாஸ்துப்படி மிதியடி பயன்படுத்துங்கள்.. வீட்டில் செல்வம் பெருகும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |