தசா புத்தி அட்டவணை | Dasa Puthi Attavanai in Tamil

Advertisement

தசா புத்தி என்றால் என்ன? | Dasa Puthi Endral Enna?

கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு நிச்சயம் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும். சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி போன்றவை ஜாதகத்தில் தசாபுத்திகளின் அடிப்படையில் தான் நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். அப்படி ஆன்மிகத்தில் சொல்லப்படும் தசா புத்தி என்றால் என்ன மற்றும் அதற்கான அட்டவணையை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு நடக்கும் திசை புத்தி கண்டறிவது எப்படி மற்றும் அதன் அட்டவணை பற்றி இங்கு காண்போம்.

தசா புத்தி என்றால் என்ன?

  • ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அவர் பிறந்த நட்சத்திர அதிபதி அவருக்கு தசையாக வரும்.
  • அதாவது ஒருவர் பிறக்கும்போது கிரகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் செல்கிறதோ அதுதான் அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நடசத்திர அதிபதி தசை தான் அவருடைய ஆரம்ப தசையாக இருக்கும்.
  • தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது, அந்த ஆயுளுக்குள் அவர் பிறந்த நேரத்தில் இருந்து இறப்பு நேரம் வரை ஒன்பது தசாபுத்திகள் நடைபெறும்.
  • ஒவ்வொரு ஜாதகருக்கும் அவருடைய வாழ்வில் நடக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை கிரகங்கள் தன்னுடைய தசாபுத்தி வருட காலங்களில் செயல்படுத்துகிறது.

தசா அட்டவணை:

தசைகளுக்கான காலம் 
சூரிய தசை  6 ஆண்டுகள் 
சந்திர தசை  10 ஆண்டுகள் 
செவ்வாய் தசை  7 ஆண்டுகள் 
ராகு தசை 18 ஆண்டுகள் 
குரு தசை 16 ஆண்டுகள் 
சனி தசை 19 ஆண்டுகள் 
புதன் தசை 17 ஆண்டுகள் 
கேது தசை 7 ஆண்டுகள் 
சுக்கிர தசை 20 ஆண்டுகள் 
மொத்தம்  120 ஆண்டுகள் 

தசா புத்தி கண்டுபிடிப்பது எப்படி Online?

நட்சத்திரம்  அதிபதி  ஆண்டு 
அஸ்வினி மகம் மூலம்  கேது 7
பரணி பூரம் பூராடம் சுக்கிரன் 20
கிருத்திகை உத்திரம் உத்திராடம் சூரியன் 6
ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் சந்திரன் 10
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் செவ்வாய் 7
திருவாதிரை சுவாதி சதயம் ராகு 18
புணர்பூசம் விசாகம் பூரட்டாதி குரு 16
பூசம் அனுசம் உத்திரட்டாதி சனி 19
ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் 17

புத்தி:

புத்தி என்பது தசையில் உள்ள 120 வருடங்களை சமபங்காக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் வைத்து ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். புத்தி கிரகங்கள் வருடத்திற்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சந்திர தசை, ராகு புத்தி என்று வைத்து கொள்வோம்.

  • சந்திர தசா வருடம் = 10 
  • ராகு தசா வருடம் = 18
  • புத்தி கணிதம் =(10×18)/120 = 1.5 வருடங்கள் 

இந்த 1.5 வருடங்களை 12 ஆல் பெருக்கவும்

1.5×12 = 18 மாதங்கள் அப்படியென்றால் 1 வருடம் 6 மாதம் ஆகும்.

இதுதான் சந்திர தசா, ராகு புத்தி காலங்கள் ஆகும்.

அந்தரம்:

  • புத்தியை ஒன்பது பகுதிகளாக பிரிப்பது அந்தரம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தியிலும் அந்தரம் முதலாவதாக வரும்.
  • குரு தசை சனி புத்தியில் முதலில் சனி அந்தரம் அடுத்து புதன் அந்தரம், கேது அந்தரம் என வரிசையாக வந்து குரு அந்தரம் முடிந்தவுடன் சனி புத்தி முடிவடைந்து அதே குரு தசையில் பிறகு புதன் புத்தி ஆரம்பமாகும்.
ஜாதக கட்டம் விளக்கம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement