தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்..! Thanjai Periya Kovil..!

Thanjai Periya Kovil Kumbabishekam

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

Thanjai Periya Kovil

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil history in tamil) – தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil) என அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தஞ்சை பெரிய கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.

newதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு..!

 

சரி வாங்க தஞ்சை பெரிய கோவில் (thanjai periya kovil) சிறப்புகள் மற்றும் அதன் அம்சம் என்னவென்றால் இக்கோயில் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழுவதே இல்லை என்பதாகும்!!!!

தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil) குறிப்புகள் ..!

கோவில்

தஞ்சை பெரிய கோவில் பெயர்க்காரணம்:

தஞ்சை பெரிய கோவில்: தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில், இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில்(Thanjai Periya Kovil) துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

கோவில் dதஞ்சை பெரிய கோவில் தல வரலாறு..!

thanjai periya kovil in tamil: தஞ்சை பெரிய கோவிலின்(thanjai periya kovil) தல வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட  விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் இந்த தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil). உலகம் வியக்கும் உன்னதமான கோவில்.

இந்த கோவிலை கட்டுவதற்க்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுவும் கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு 25 ஆண்டுகள் ஆனதாம், பின்பு செதுக்கிய கற்களை செட் செய்வதற்கு 9 ஆண்டுகள் ஆனதாம், மொத்தம் 34 ஆண்டுகள் ஆனதாம்.

கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளதாம். அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல்லிலாலானது.

இங்கிருந்து 7 கி.மீ தூரத்திற்கு, அருகில் உள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரேயொரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனர்.

தஞ்சை பெரிய கோவில் கோபுத்தத்தின் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோவிலாகும்.

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் :-

lingmஇக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.

இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 34 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23  அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): தமிழகத்தில் இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.

1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

எந்த நட்சத்திரகாரர்கள் என்ன காயத்திரி மந்திரங்கள் சொல்லவேண்டும்

தஞ்சை பெரிய கோவில் – பிராத்தனை:

தஞ்சை பெரிய கோவில் (Thanjai Periya Kovil) ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோவில் என்பதால், இத்தலத்தில் என்ன பிராத்தனை செய்தாலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இத்தலத்தில் உள்ள வராகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் உடனே திருமணம் நடக்குமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிராத்தனை செய்தால், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.

மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும், மன அமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்காகவும் பிராத்தனை செய்தால், சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுக்கிறார்.

தஞ்சை பெரிய கோவில் விசேஷங்கள்:

  1. பிரம்மோற்ஸவம்
  2. ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
  3. அன்னாபிஷேகம்
  4. திருவாதிரை
  5. ஆடிப்பூரம்
  6. கார்த்திகை
  7. பிரதோசம்cf
  8. சிவராத்திரி
  9. தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவில் (thanjai periya kovil) திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை.
மாலை மணி முதல் 9 மணி வரை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்