தடைகளை நீக்கும் விநாயகர் மந்திரங்கள்..!

Advertisement

தடைகளை நீக்கும் விநாயகர் மந்திரம்

நம் அனைவருக்கும் கணபதியே முழு முதற் கடவுளாக விளங்குகிறார். நாம் எந்த செயலை செய்தாலும் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் நம் செயலை தொடங்குகிறோம். நாம் ஆரம்பிக்கும் எந்த செயலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையை விநாயகர் நாமக்கு தருகிறார்.

நம் வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை தீர்க்கும் கடவுளாக விநாயகர் கருதப்படுவதால் அவரை நாம் முழு முதற் கடவுள் என்று அழைக்கிறோம். இத்தகைய சிறப்பை கொண்ட தடைகளை நீக்கும் விநாயகர் மந்திரங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

27 நட்சத்திர விருட்ச விநாயகர்

விநாயகர் சிறப்பு:

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் என்றும் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான கடவுள் என்றும் சொல்லப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல், அவல், பொரி, வாழைப்பழம் படைத்தது வழிபட்டால் அவருடைய அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

உங்கள் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்க தினமும் இந்த மூன்று மந்திரங்களை கூறி விநாயகரை வழிபட்டு வந்தால் உங்களிடம்  இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் மனம் ஒன்றி நீங்கள் இந்த மந்திரங்களை கூறி வழிபட்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தடைகள் நீக்கும் மந்திரம்:

  • ஓம் கம் கணபதயே நமஹ – இந்த மந்திரத்தை தினமும் கூறினால் உங்கள் வாழ்வில் இருக்கும் எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் நீங்கும். சுப காரியங்கள் துவங்கும் முன் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நீங்கள் ஆரம்பிக்கும் காரியம் நிச்சயம் வெற்றி அடையும்.
  • ஓம் கபிலாய நமஹ – இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் உங்களிடம் இருக்கும் நோய்கள் எல்லாம் குணமாகும். மேலும் உங்கள் வாழ்வில் எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை அல்லது துன்பங்கள் ஏற்படும் பொழுது இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
  • ஓம் கணேசாய நமஹ – இந்த மந்திரத்தை நாம் சொல்வதுடன், நம் குழந்தைகளுக்கு மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இதை சொல்லி கொடுப்பது நமக்கும் பிறருக்கும் நம் நினைவாற்றலை அதிகரிக்கும்.

இந்த மனிதரங்களை தினமும் நாம் சொல்லி வந்தால் நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் மற்றும் தடைகள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம். இந்த மந்திரத்தை சுத்தமாக, மன தூய்மையுடன் மனம் ஒன்றி நாம் பயன்படுத்துவது அவசியம்.

தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement