தன ராஜயோகம் பலன்கள்
சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக காணப்படுபவர். சுக்கிர பகவான் ஒரு ராசியில் 30 முதல் 36 நாட்கள் வரை அமர்வார். அதேபோல் ஒவ்வொரு மாதமோ அல்லது 36 நாட்களில் மற்றொரு ராசிக்கு மாறுவார். இவர் எந்த ராசிக்கு அதிபதி தெரியுமா..? இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். ஆனால் தற்போது மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் நாளை அதாவது 2023 மே 30 ஆம் தேதி இரவு 07.39 மணிக்கு சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த மாற்றத்தால் கடக ராசியில் தன ராஜயோகம் உருவாகிறது. இந்த தன ராஜயோகத்தின் தாக்கத்தால் 12 ராசிக்கும் காணப்பட்டாலும் 3 ராசிக்கு அதிகமான பலன்கள் இருக்கும் அது என்ன தெரியுமா..?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தன ராஜயோகம் பலன்கள்:
மகர ராசி:
மகர ராசியின் 7 வீட்டில் சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமான தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் நெருக்கமும், காதலும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையிருந்தால் அது முடிவுக்கு வரும். உறவுகள் வலுவாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலைபார்க்கும் இடத்தில் முழு திறமையை வெளிக்காட்டி மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது இதில் யாரெல்லாம் நனைய போகிறீர்கள்
மிதுன ராசி:
மிதுன ராசியின் 2 வீட்டில் சுக்கிரன் செல்கிறார். பொருளாதாரம் சாதகமாக முடியும். நிதி நிலை ஏற்ற வகையில் அமையும். பரம்பரை தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். நல்ல லாபமும் கிடைக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடனான உறவு மேம்படும். வாழ்க்கை துணையுடன் நெருக்கமும் ஏற்படும். மனக்கசப்புகள் நீங்கும். வேலைபார்ப்பவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும்.
மேஷ ராசி:
மேஷ ராசியின் 4 ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை குழப்பம் நிறைந்த மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவார். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்வீர்கள். வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுக்கிரன் பெயர்ச்சி இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமே சாதகமாக முடியும்!!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |