தாலிக்கயிறு அணியும் முறை தெரியுமா ?

Thali Aniyum Murai

தாலி அணிவது எப்படி? | Thali Anivathu Eppadi

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய இன்றியமையாத ஒன்று. இந்திய கலாச்சாரத்தில் திருமண நிகழ்வின் போது பல சடங்குகள் நடத்தப்படுகிறது. அதில் ஒன்று தான் மணமகன் மணமகளை தன் மனைவியாக்கி கொள்ள அப்பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலியாகும். தாலி என்றாலே மஞ்சள் கயிற்றில் கட்டுவது தான் வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி தாலியை தங்க சரடில் மாற்றி போடும் வழக்கத்திற்கு வந்துவிட்டோம். நாம் இந்த பதிவில் தாலி அணியும் முறையை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..! கெட்ட சகுனமா..!

தாலி அணியும் முறை:

பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிக்கொடி பெண்களின் மார்பு குழியில் படும்படி கட்டிக்கொள்ள வேண்டும். தாலி கயிற்றில் உள்ள மஞ்சள் மற்றும் தங்கமும் மார்பு குழியில் படும்படி இருந்தால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மார்பகத்தில் வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

தாலியை தங்க சரடில் போடுவது அவரவர் விருப்பம். தங்களுக்கு எப்படி வசதி உள்ளதோ அத்தனை பவுனில் தாலியை அணிந்து கொள்ளலாம். ஆனால் அது ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். இரண்டு பவுனில் தாலி சரடை வாங்குகிறீர்கள் என்றால், அது இரட்டைப்படை. 2 பவுனுடன் சேர்த்து, ஒரு குண்டுமணி தங்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அது போன்று மூன்று பவுனிலும் தாலிக்கொடியை அணிந்து கொள்ளலாம். 5, 7, 9 இப்படியாக உங்களது வசதிக்கு தகுந்தவாறு பவுனை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

இரட்டைப் படையில் 2, 4, 6 என்ற கணக்கில் தாலி சரடு வாங்குவதாக இருந்தால் மட்டும், ஒரு குண்டுமணி அளவு அதிகமாக வைத்து செய்து போட்டுக் கொள்வது நமக்கு நன்மையை கொடுக்கும்.

ஒற்றுமை நிலைக்க:

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதும் ஒற்றுமை நிலைக்க தாலி சரடின் பவுனை இரட்டை படையில் அணியாமல் ஒற்றை படையில் அணிந்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

ஆடி மாதத்தில் வரும் ஆடி பதினெட்டாம் பெரு தினமன்று திருமணமான சுமங்கலி பெண்களும், புதிதாக திருமணமான பெண்களும் புனித நதிக்கரைகளில் அல்லது கோவில்களில் பூஜைகள் செய்து தங்களின் தாலி கயிற்றில் பழைய சரடை அகற்றிவிட்டு புதிய மஞ்சள் பூசப்பட்ட சரடில் தாலியின் தங்கத்தை இணைத்து அணிந்து கொள்வது தொன்று தொட்டு கடைபிடிக்கபடும் ஒரு வழக்கமாகும்.

திருமண வகைகள்

லட்சுமி கடாட்சம் நிலைக்க:

அதிக பவுனில் தாலியை அணிந்துக் கொண்ட பெண்ணிற்கு வீட்டில் மன நிம்மதி இல்லையெனில் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இருக்கமாட்டாள் என்பது ஐதீகம்.

அதுவே எந்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் மதிப்பு மரியாதை கொடுத்து குடும்பத்தை சரியான முறையில் வழிநடத்துகிறார்களோ அவர்கள் வீட்டில் கண்டிப்பாக மகாலட்சுமி குடியிருப்பாள்.

சாஸ்திரம்:

தாலி கயிறை மாற்றும் சுப தினத்தில் பெண்கள் கட்டாயமாக தலை குளிக்க வேண்டும். நண்பகலுக்கு முன்பே நல்ல நேரத்தில் உங்களுடைய குல தெய்வத்தை வணங்கி, புது கயிற்றில் மஞ்சள் பூசி அதில் தாலி நகையை கோர்த்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

திருமணம் வேறு பெயர்கள்

 

இதை பெண்கள் நின்றுக்கொண்டு செய்யாமல் அமர்ந்த நிலையில் தான் செய்ய வேண்டும். இது அப்பெண்களுக்கும் அவர்களது கணவன் மற்றும் அவளை சார்ந்த அனைவருக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.

கணவன் மனைவியை புரிந்துகொண்டு, மனைவி கணவனை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து சென்றாலே இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்