திருமாலின் ஒரு நாமம் | Thirumal Other Names in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் திருமாலின் ஒரு நாமம் பற்றிய முக்கியத்துவம் அதனை அணிவதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக ஒவ்வொரு சமணர்கள், வைணவர்கள், என நிறைய சமயங்கள் உள்ளது அதில் ஒவ்வொன்றிற்கும் நிறைய விதிமுறைகள் உள்ளது. அதனை அந்த சமயத்தை சார்ந்தவர்கள் கடைபிடிப்பார்கள். அந்த வகையில் வைணவர்கள் சமயத்தில் திருநாமம் அணிந்துகொள்வார்கள் அதனை ஏன் அணிந்துகொள்கிறார்கள், அதனை அணிவதால் என்ன பலன்கள் கிடைக்கும். என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
திருமண் என்றால் என்ன:
- வைணவர்கள் சமயத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது திருநாமம் அணிவது. திருமாலின் பாதங்கள் திருமண்ணாக அறியப்படுகிறது. அதனை எதற்காக அணிந்துகொள்கிறார்கள். அதன் நன்மைகளை பார்ப்போம் வாங்க.
- வைணவர்கள் அணிந்துகொள்ளும் சின்னமாக பார்க்கப்படும் நாமம் ஆகும். அதனை திருமண் காப்பு தரித்தல் என்று வைண சமயத்தில் சொல்வார்கள்.
- பெருமாளை வைணவசமயத்தின் முதல் கடவுள்களாக வணங்குவார்கள். திருமண் என்னும் திருநாமம் திருமாலின் பாதங்களை குறிப்பதாகும்.
- நம் உடல் ஒரு நாளில் மண்ணோடு மண்ணாக போய்விடும். என்ற வாழ்வியலில் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த திருநாமத்தை அணித்துக்கொள்வார்கள். அதனால் திருமாலின் பாதங்களை பற்றிக்கொள்வதை திருமண் காப்பாகும்.
- திருமாலின் நாமத்தை வடகலை, தென்கலை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது.
- வடகலை வைணவத்தினர் திருமாலின் சரணாகதி அடைவதற்காக அவரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையென்றால் அவருக்கு பெருமாளின் அருள் கிடையாது.
திருமாலின் 10 அவதாரங்கள் |
வடகலை நாமம்:
- மேல்கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் திருமாலின் பாதம் இல்லாமல் வளையம் போல் திருநாமம் இட்டுக்கொள்வார்கள் வடகலை வைணவர்கள்.
தென்கலை நாமம்:
- மேல் கொடுக்கப்பட்ட படத்தில் வடகலை நாமத்தில் உள்ளது போல் இல்லாமல் இதில் வளைந்து வரும் இடத்தில திருமாலின் பாதங்களை வைத்து நாமம் இட்டுக்கொள்வது தென்கலை வைணவத்தினர்.
பெருமாள் நாமம் போடுவது எப்படி:
திருமாலின் நாமம் உடலில் 12 இடங்களில் நாமம் இட்டுக்கொள்வார்கள். அதனை போட்டுக்கொள்ளும் போது அதற்கான மந்திரத்தை சொல்லி இட்டுக்கொள்வார்கள் அதனை இப்போது பார்ப்போம்.
கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும். என ஒவ்வொரு முறையும் உடலில் இட்டுக்கொள்ளும் போதும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு இட்டுக்கொள்வார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |