வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

Advertisement

தீய சக்திகள் விலக..! Veetil theeya sakthi vilaga

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. வீட்டில் தீய சக்தி இருப்பதை உணர்த்தும்  அறிகுறிகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். பொதுவாக நம்மள்ல நிறைய பேர்களின் வீடுகளில் இருக்ககூடிய பொதுவான பிரச்சனை என்ன என்று பார்த்தால் முன்னேற்ற தடை. எப்படியாவது முன்னேறிவிடலாம் என்றாலும் நமக்கு ஏற்படக்கூடிய தடைகளின் காரணமாக முன்னேற்றம் என்பதை நாம் பார்க்கவே முடியாது. அந்த தடைகளுக்கு காரணமாக அமையக்கூடிய ஒன்று தான் தீய சக்திகளின் ஆதிக்கம். ஆக வீட்டில் இருக்கும் தீய சக்திகளின் ஆதிக்கத்தை எப்படி கண்டறிவது என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதல் அறிகுறி:பல்லி

ஒருசிலரின் வீடுகளில் பல்லியின் சந்தம் இருக்காது, அதேபோல் காகத்திற்கு உணவு வைக்கலாம், காகத்திற்கு உணவு வைத்தாலும் காகம் அந்த உணவை சாப்பிடாது. இவை இரண்டுமே நமது வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும். இதற்கான பரிகாரம் என்னவென்றால் வெள்ளிக்கிழமை அன்று காலை வீடு முழுவது பசுமாட்டின் கோமியத்தை தெளித்துவிடவும். இந்த கோமியத்தை எப்படி தெளிக்க வேண்டும் என்றால் கோமியத்தில் கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து மாவிலையால் வீடு முழுவதும் கோமியத்தை தெளிக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் பல்லி இருப்பது நல்லதா.! கெட்டதா.!

மேலும் வெள்ளிக்கிழமை அன்று வீடு முழுவது சாம்பிராணியில் வீடு முழுவதும் தூபம் காட்டவும். அந்த தூபத்தில் வெண்காடு சேர்த்து சாம்பிராணி காட்டவும். இவ்வாறு செய்வவதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் கெட்ட ஆற்றல்கள் அனைத்தும் விலகும்.

இரண்டாவது அறிகுறி:துளசி செடி

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் செடிகள் வளர்ப்பதை வழக்கமாக வைத்திருப்போம். குறிப்பாக சிலரது வீட்டில் துளசி செடி மற்றும் இது போன்ற தேவிகா செடிகள் வைத்து வளர்ப்பார்கள், அந்த செடி நன்கு வளர்ந்த நிலையில் திடீர் என்று கருகி போனால் கண்டிப்பாக நமது வீட்டில் தீய சக்தி இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் நமது வீட்டை துடைக்கும் போது அவற்றில் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அந்த நீரை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்யுங்கள்

மூன்றாவது அறிகுறி:தேள்

வீட்டை நாம் சுத்தமாக வைத்திருக்கும் நிலையில் நமது வீட்டிற்கு பூரான், பாம்பு, தேள் இது போன்ற விஷ சந்துகள் அடிக்கடி வருகிறது என்றால் கண்டிப்பாக நமது வீட்டிலுக்குள் தீய சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். இவ்வாறு உங்கள் வீட்டிற்கு இது போன்ற விஷ சந்துகள் அதிகமாக வருகிறது என்றால் உங்கள் வீடு முழுவம் மஞ்சள் கலந்த நீரை தெளித்துவிடம். அதன் பிறகு தொடர்ந்து 7 நாட்கள் வீட்டிற்கு சான்பிராணி காட்டவும்.

நான்காவது அறிகுறி:காளை மாடு

பொதுவாக அனைவருக்குமே கனவுகள் வருவது ஒரு இயல்பான விஷயம் தான். அந்த கனவுகள் சாதரணமாக இருந்தால் ஒன்று பிரச்சனை இல்லை. அதுவே நாம் பயம்கொள்ளும் அளவிற்கு கனவுகள் வந்தால் அந்த கனவு நமக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும். அந்த வகையில் உங்கள் வீட்டிற்குள் காளை மாடு நுழைவது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிற்குள் தீய சக்தி இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் கனவு கண்ட அடுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு எலுமிச்சை பழம் ஒன்றை வாங்கிக்கொண்டு அந்த பழத்தை துர்க்கையின் கோயிலுக்கு எடுத்து சென்று அன்னையின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு, பிறகு அந்த எலுமிச்சை பழத்தை கையுடன் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டின் நிலைவாசலில் கட்டி தொங்கவிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தீய ஆற்றல்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா ..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement