1 இலை போதும்..! தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்..!

Advertisement

தொழில் தடை நீங்க பரிகாரம்

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தொழில் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு காரணம் பணம் தான். நம் அனைவருக்குமே தெரியும் பணம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று. அதனால் தான் இங்கு அனைவருமே பணத்தை தேடி காலம் முழுவதும் ஓடி கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட பணம் நமக்கு சுலபமாக கிடைத்து விடாது. அதற்கு நாம் போராடி தான் ஆகவேண்டும்.

அதுபோல கைநிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், நல்ல தொழில் செய்ய வேண்டும். ஆனால் என்ன தொழில் செய்தாலும் அதில் லாபமே வருவதில்லை. நஷ்டம் மட்டுமே இருக்கிறது என்று பலரும் சொல்லி புலம்புகிறார்கள். அப்படி புலம்பும் நபர்களுக்கு தான் இந்த பதிவு. இந்த பதிவில் தொழில் தடை நீங்கி, தொழிலில் லாபம் அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா..

தொழில் தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்:

தொழில் தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்நம் அனைவருக்குமே சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நாம் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கினால், அதிலும் ஏதாவது நஷ்டம் வந்துவிடும்.

அதனால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் தொழில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

அதற்கு நீங்கள் அரசமரத்திற்கு அடியில் பிள்ளையார் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அல்லது அந்த மாதிரி அரசமரத்திற்கு அடியில் பிள்ளையார் சிலை இருக்கும் ஏதோ ஒரு இடத்திற்கு கூட செல்லலாம். 

அங்கு சென்று அந்த அரசமரத்தை 3 முறை சுற்றி வலம் வந்த பிறகு, அங்கு இருக்கும் அரச இலையை விநாயகரை நினைத்து எடுத்து வந்து உங்கள் கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் தொடர்புடைய பதிவுகள் 👇
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குபேரன் 108 போற்றி
குபேர விளக்கு ஏற்றும் முறை..

தொழில் தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

ஒருவேளை அரசமரத்திற்கு அடியில் பிள்ளையார் சிலை இல்லாமல், வெறும் அரசமரம் மட்டும் தான் இருக்கிறது என்றால், அந்த மரத்தை பிள்ளையாரை நினைத்து 3 முறை சுற்றி வந்து பரிகாரத்தை செய்யலாம்.

இந்த பரிகாரத்தை நீங்கள் திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் செய்யலாம். அல்லது தொடர்ந்து உங்களால் கோவிலுக்கு செல்ல முடியும் என்றால், தினமும் செய்யலாம்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். தினமும் எடுத்து வந்த அரச இலைகள் காய்ந்துவிட்டால் என்ன செய்வது என்று.

அப்படி காய்ந்த அரச இலைகளை மிதிப்படாத இடத்தில் வைக்கலாம். அதாவது உங்கள் ஊரில் இருக்கும் நீர் நிலைகளில் போட்டுவிடலாம். அதுபோல நீங்கள் ஒரு புது இலையை வைக்கும் போது பழைய இலையை எடுத்து விட வேண்டும்.

இதுபோல நீங்கள் அரசமரத்தை சுற்றி வந்து அங்கு இருக்கும் அரச இலைகளை எடுத்து வந்து உங்கள் கல்லாப்பெட்டிகளில் வைத்தால், உங்கள் தொழிலில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் செய்யும் தொழில் லாபம் அதிகரிக்கும். அரசனை போல அனைத்து செல்வங்களையும் இந்த அரசமரத்தின் இலை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement