தோஷம் வகைகள் மற்றும் பரிகாரம் | Dosham Vagaigal in Tamil

Advertisement

தோஷம் வகைகள் | Types of Dosha in Tamil

ஒருவரின் இல்லத்தில் அதிக கஷ்டங்களும், துன்பங்களும் நிறைந்திருந்தால் தோஷம் உள்ளது என்று அர்த்தம். ஜாதகத்தில் இருக்கிற கிரகம் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த தவறுகளையும், புண்ணியங்களையும் பிறக்கும் போதே கடவுள் எழுதி விடுகிறார் அதை பொறுத்து தான் இப்பிறப்பில் நமக்கு தோஷமாக வருகிறது. தோஷத்தில் பல வகைகள் உள்ளன நாம் இன்றைய ஆன்மிக பகுதியில் தோஷ வகைகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.

தோஷம் வகைகள்| Types of Dosham in Tamil:

  1. வஞ்சித தோஷம்
  2. பந்த தோஷம்
  3. கல்பித தோஷம்
  4. வந்தூலக தோஷம்
  5. ப்ரணகால தோஷம்
  6. செவ்வாய் தோஷம்
  7. ராகு – கேது தோஷம்
  8. மாங்கல்ய தோஷம்
  9. சர்ப்ப தோஷம்
  10. களத்திர தோஷம்

வஞ்சித தோஷம்:

  • தோஷம் வகைகள்: காமம் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படும்.
  • இந்த தோஷத்தை நீக்க உடன் பிறந்த சகோதரிகளுக்கு தேவையானவற்றை செய்து அவர்களை வணங்க வேண்டும். சகோதரி இல்லாதவர்கள் ஏழை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

பந்த தோஷம்:

  • Types of Dosha in Tamil: பந்த தோஷம் என்பது நம்மை நம்பி வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு துரோகம் செய்தால் அல்லது பழி வாங்கினால் இந்த தோஷம் ஏற்படும்.
  • பந்த தோஷத்தை நீக்க உறவினர்களான மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

கல்பித தோஷம்:

  • தோஷம் வகைகள்: தன்னை விரும்பாத நபரை விரும்புவதாக நினைத்து கொண்டு (ஆண்/ பெண்) முறையின்றி பழகுவதால் இந்த கல்பித தோஷம் ஏற்படுகிறது.
  • இந்த கல்பித தோஷத்தை நீக்க உங்களை விட வயது அதிகமாக உள்ள பெண்ணிற்கு உதவி செய்ய வேண்டும்.

வந்தூலக தோஷம்:

  • Types of Dosha in Tamil: ஆண் வயது அதிகமாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் வந்தூலக தோஷம் ஏற்படும். இதனால் மூச்சுத்திணறல், நரம்பியல் பிரச்சனை ஏற்படலாம்.
  • வந்தூலக தோஷத்தை நீக்க வயதான தம்பதிகளுக்கு தர்மம் செய்ய வேண்டும்.

ப்ரணகால தோஷம்:

  • Dosham Vagaigal in Tamil: பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றிற்கு மயங்கி திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்காது.
  • அனாதை ஆசிரமத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்தால் ப்ரணகால தோஷம் நீங்கும்.

செவ்வாய் தோஷம்:

  • தோஷம் வகைகள்: 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்கள் ஜாதகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இந்த தோஷம் திருமண தடையை ஏற்படுத்தும்.
  • செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

ராகு – கேது தோஷம்:

  • Types of Dosha in Tamil: ராகு அல்லது கேது ஜாதகத்தில் 2, 7, 8 ஆகிய இடங்களில் இருந்தால் ராகு – கேது தோஷம் ஏற்படும்.
  • இந்த தோஷம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.

மாங்கல்ய தோஷம்:

  • Dosham Vagaigal in Tamil: லக்னத்தில் 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி கிரகங்கள் இருப்பதால் மாங்கல்ய தோஷம் ஏற்படுகிறது.
  • இந்த தோஷம் உள்ளவர்கள் வீட்டில் அல்லது கோவில்களில் வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மி பூஜை செய்து திருமணம் ஆன சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், ஜாக்கெட் போன்றவற்றை கொடுத்து, உணவளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

சூரிய தோஷம்:

  • தோஷம் வகைகள்: லக்னத்தில் 2, 7, 8 இடங்களில் சூரியன் இருப்பதால் இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க சூரிய தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்வது நல்லது.

களத்திர தோஷம்:

  • Dosham Vagaigal in Tamil: லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.

மற்ற தோஷங்கள்:

  1. பித்ரு தோஷம் 
  2. புத்திர தோஷம்
  3. பிரமஹத்தி தோஷம்
  4. நாக தோஷம்
  5. நவகிரக தோஷம்
  6. சகட தோஷம்
களத்திர தோஷம் நீங்க பரிகாரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement