நகை அடகு வைக்க உகந்த நாள் | Nagai Adagu Vaikka Nalla Naal 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் நகை அடகு வைக்க உகந்த நாள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே பல்வேறு தேவைகளுக்காக நகையை அடகு வைப்போம். ஆனால், அதனை மீட்க பெரும்பாடு படுவோம். நகை திருப்பும் காலம் வந்தும் நம்மால் நகையை திருப்ப முடியாமல் கஷ்டப்படுவோம். ஏன், பலபேர் நம்மிடமே நகையை அடகு வைத்தேன் ஆனால், அதனை திருப்ப முடியாமல் நகை ஏலத்தில் போய்விட்டது என்று வருத்தத்துடன் கூறியிருப்பார்கள். இவை அனைத்திற்கும் காரணம், நகையை எப்போது அடகு வைக்க வேண்டும் என்பதே தெரியாமல் இருப்பது தான்.
நகை அடகு வைப்பதற்கு உகந்த நாள் மற்றும் நேரத்தினை அறிந்து அடகு வைப்பதன் மூலம் நகையை விரைவில் மீட்கலாம். அதனால், இப்பதிவின் வாயிலாக எந்த கிழமையில் நகை அடகு வைக்கலாம் (Nagai Adagu Vaikka Nalla Naal 2025) என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.
எந்த நாளில் நகையை அடகு வைக்க வேண்டும்.?

இந்த நாட்களை தவிர்த்து, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஆகிய நாட்களில் நகையை அடகு வைக்க கூடாது.
மேலும், நகை அடகு வைக்கும்போது உகந்த நட்சத்திரம், உகந்த நேரம் மற்றும் உகந்த ஹோரை பார்ப்பதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால் அதனை பற்றியும் பின்வருமாறு தெரிந்துகொள்வோம்.
நகை அடகு வைக்க உகந்த நட்சத்திரம்:
Nagai Adagu Vaikka Nalla Naal – கிருத்திகை நட்சத்திரம், மகம் நட்சத்திரம், அஸ்தம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரம் மற்றும் சதயம் நட்சத்திரம் போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நகையை அடகு வைக்கலாம்.
இந்த நட்சத்திரங்களில் நகையை அடமானம் வைத்தீர்கள் என்றால், அடமானம் வைப்பவர்களுக்கு அதாவது உங்களுக்கு தரித்திரியத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், அந்த நகையை வாங்குபவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதனால், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் நகையை அடகு வைக்காமல் பிற நட்சத்திர நாட்களில் நகையை அடகு வைக்கலாம்.
அடகு வைத்த நகையை மீட்க உகந்த நாள் 2025
எந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டும்.?
Nagai Adagu Vaikka Nalla Neram – குளிகை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நகையை அடகு வைக்கலாம். ஏனென்றால், குளிகை நேரம் வளர்ச்சிக்கான நேரமாக இருக்கிறது. குளிகை நேரத்தில் நாம் ஒரு காரியத்தை தொடங்கினோம் என்றால், அந்த காரியம் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆகையால், நகை அடகு வைப்பது, கடன் பெறுவது, துக்க நிகழ்வுகளை தொடங்குவது போன்ற அசுப காரியங்களை தொடங்க கூடாது. அவ்வாறு தொடங்கினால் அது நீடித்துக்கொண்டே போகும். அதனால், குளிகை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நகையை அடகு வைக்கலாம்.
எந்த ஹோரையில் நகையை அடகு வைக்க வேண்டும்.?
சனி ஹோரையில் நகையை அடகு வைக்க கூடாது. சனி ஹோரையில் அடகு வைத்தால் நகையை மீட்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஆகையால், சனி ஹோரையை தவிர்த்து மற்ற ஹோரையில் நகையை அடகு வைக்கலாம்.
இவ்வாறு நாள், நேரம், நட்சத்திரம் மற்றும் ஹோரை பார்த்து நகையை அடகு வைப்பதன் மூலம் அடகு வைத்த நகையை எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் திருப்ப முடியும்.
நகை அடகு வைக்க கூடாத நாட்கள்:
நீங்கள் நகையை மறந்தும் கூட பிறந்த நாள் மற்றும் ஜனன நேரத்தில் நகையை அடகு வைக்க கூடாது. மேலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நகையை அடகு வைக்க கூடாது.
குளிகை நேரத்தில் நகையை அடகு வைக்கக்கூடாது. நீங்கள் இந்த நேரத்தில் நகையை அடமானம் வைக்கிறீர்கள் என்றால் நகையை அடிக்கடி அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் நகையை அடமானம் வைக்ககூடாது.
நீங்க பிறந்த நட்சத்திரத்திலும் நகையை அடகு வைக்கக்கூடாது. அதே போல ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் நகையை அடகு வைக்கக்கூடாது.
அதே போல சில திதிகளிலும் நகையை அடமானம் வைக்ககூடாது. பஞ்சமி, தசமி, சஷ்டி, பெளர்ணமி, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் நகையை அடமானம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












