வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நவகிரகங்களும் அதற்குரிய தானியங்களும்..!

Updated On: April 4, 2024 3:22 PM
Follow Us:
navakiragam thaniyam
---Advertisement---
Advertisement

நவக்கிரக தானியங்கள்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவகிரகங்களும் அதற்குரிய தானியங்களையும் பற்றி பார்க்கலாம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தானியத்தை வகுத்துள்ளார்கள். அவற்றில் பல்வேறு அர்த்தங்களையும் வகுத்துள்ளார்கள். நவதானியங்கள் என்பது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியத்தை வகுத்துள்ளார்கள். நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை என இந்த ஒன்பது தானியங்களும் நவதானியங்கள் ஆகும். இவை தான் நவகிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்ற தானியங்களை தானம் செய்து வருவதன் மூலம் அக்கிரகத்தினால் ஏற்படும் அசுப நிலைகள் குறைந்து நன்மை உண்டாகும். எனவே, இப்பதிவில் Navakiragam Thaniyam பற்றி விவரித்துள்ளோம். நீங்கள் நவகிரகங்களும் அதற்குரிய தானியங்களையும் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நவகிரகங்களின் நிறம்

நவகிரகங்களும் தானியங்களும்:

நவக்கிரகம்  தானியம் 
சூரியன் (ஞாயிறு) கோதுமை
சந்திரன் (திங்கள்) அரிசி
செவ்வாய் துவரை
புதன் பச்சைபயிர்
குரு (வியாழன்) கொண்டை கடலை
சுக்கிரன் (வெள்ளி) மொச்சை
சனி எள்
ராகு உளுந்து
கேது கொள்ளு

நவகிரகங்களும் தானியங்களும்

கோதுமை:

கோதுமை சூரிய பகவானுக்கு ஏற்ற தானியமாக இருக்கிறது. எனவே, ஞாயிற்று கிழமையில் கோதுமை அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் செய்வதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

அரிசி (நெல்):

நெல் சந்திர பகவானுக்கு உரிய தானியம் ஆகும். ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது, திங்கட்கிழமை அன்று பச்சரிசியை தானம் செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

துவரை:

துவரம்பருப்பு செவ்வாய் பகவானுக்கு உரிய தானியமாக இருக்கிறது. எனவே, துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க் கிழமைகளில் தானம் செய்து வர நன்மை பெருகும். மேலும், தொழிலும் பெருகும்.

பச்சைபயிர்:

பச்சைபயிர் புதன் பகவானின் தானியம் ஆகும். எனவே, ஜாதகத்தில் புதனால் பாதிக்கப்படுபவர்கள் பச்சைப் பயிறு சுண்டல் செய்து புதன் பகவானுக்கு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். மேலும், பச்சை பயிறு அல்லது அது சம்மந்தப்பட்ட உணவுகளை தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதிப்பு குறையும்.

நவகிரகத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா.?

கொண்டை கடலை:

கொண்டை கடலை குரு பகவானின் தானியம் ஆகும். எனவே, வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

மொச்சை:

மொச்சை சுக்கிர பகவானின் தானியம் ஆகும். ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில் வெள்ளிக் கிழமைகளில் மொச்சையை தானம் செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம். மேலும், செல்வ செழிப்பு கிடைக்கும்.

கருப்பு எள்:

கருப்பு எள் சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும். சனி தோஷம் உள்ளவர்கள் அதாவது ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்மச் சனி ஆகிய சனியினால் பாதிக்கபடுபவர்கள் எள் கலந்த உணவை சனிக் கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். மேலும், காக்கைக்கு எல் கலந்த சாதம் வைக்க வேண்டும்.

உளுந்து:

உளுந்து ராகு பகவானுக்கு உரிய தானியம் ஆகும். ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து வடை அல்லது உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்களை சனிக் கிழமையில் தானம் செய்து வருவதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

கொள்ளு:

கொள்ளு கேது பகவானின் தானியம் ஆகும். கேது பகவானால் பாதிக்கப்படுபவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கொள்ளு கலந்த உணவுகளை தானம் செய்து வருவதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now