Panguni Uthiram Special in Tamil
மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம். இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் இந்த நன்னாளில் விருத்தம் இருந்து முருகனை நெஞ்சுருக வழிபடுவார்கள். தமிழ் மாதத்தின் 12-வது மாதம் தான் இந்த பங்குனி மாதம் ஆகும். நட்சத்திரங்கள் வருசையில் 12-வது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இவை இரண்டும் இணைத்து வரக்கூடிய நன்னாளை தான் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் பங்குனி உத்திரம் சிறப்புகள் பற்றி சிலவற்றை படித்தறியலாம் வாங்க.
பங்குனி உத்திரம் சிறப்புகள்:
1) இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரத்திற்கு அதிக மகத்துவம் உள்ளதாம். ஏனென்றால் இந்த நட்சத்திரத்தில் தான் தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
2) 12-வது மதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணைகின்ற புண்ணிய நாளை தான் இந்த பங்குனி உத்திரம் ஆகும்.
3) பங்குனி உத்திரம் நாளில் எடுக்கும் விருத்தத்தினை கல்யாணம் விருத்தம், திருமணம் விருத்தம் என்று சொல்வார்கள்.
4) சிவன் அன்னை பார்வதி தேவி இருவரும் மணக்கோலத்தில் சுந்திரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி அளித்த திருநாள் பங்குனி உத்திரம் அன்று தான்.
5) அன்னை மீனாட்சியை திருமணம் செய்து, மீனாட்சி சுந்தரேஸ்வரராக காட்சியளித்ததும் பங்குனி உத்திரம் திருநாளில் தான்.
6) சிவபெருமானின் தவத்தை காலத்தால் சிவனின் நெற்றி கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். இருப்பினும் ரதியின் வேண்டுதலினால் மன்மதன் மீண்டும் உயிர் பேற்றை நாள் இந்த பங்குனி உத்திரம் நன்னாளில் தான்.
7) தமிழ் கடவுளான முருகன் தெய்வானையை இந்த பங்குனி உத்திரம் நன்னாளில் நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். மேலும் வள்ளியின் அவதார தினமும் அந்நாள் தான்.
8) ஸ்ரீ ரங்கம் மன்னர் – ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இந்த நன்னாளில் தான்.
9) மகாலட்சுமி பங்குனி உத்திரம் விருத்தினை மேற்கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்ற நாள். அதேபோல் மகாலட்சுமி அவதரித்த நன்னாளும் இந்த பங்குனி உத்திரம் நாளில் தான்.
10) தேவேந்திரன் – இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
11) இந்த பங்குனி உத்திரம் நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாருமன், திருமாலும் காட்சி தருவார்கள். மேலும் காஞ்சிவரதராஜர் கோயிலில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீ வரதராஜர் காட்சி தருவார்.
12) தேவேந்திரன் – இந்திராணி, நான்முகன் கலைவாணி கல்யாணமும் இந்த பங்குனி உத்திரம் திருநாளில் தான் நிகழ்ந்தது.
13) தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன் – ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
14) சந்திரன் அழகுமிகு 27கன்னியர்களை மனைவியாக ஏற்றுக்கொண்ட நாளும் பங்குனி உத்திரம் நாளில் தான்.
15) 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.
16) பங்குனி உத்திரம் விரதம் இருந்து உங்கள் ஊரில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் தங்களுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
17) திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
18) அழகன் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள் ஆகும். ஆகவே பக்தர்கள் இந்த நாளில் முருகனுக்கு காவடி எடுத்தும், அழகு குத்தியும், விரதம் இருந்தும் முருகனை வணங்குவார்கள்.
19) உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.
20) இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறுமாம்.
பங்குனி உத்திரம் 2023 தேதி |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |