படிப்பில் சிறந்து விளங்க பரிகாரம்
பொதுவாக கல்விக்கு அதிபதியாக விளங்க கூடியவர் சரஸ்வதி தான். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கியவர் தான் ஹயக்ரீவர். இந்த விஷயத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பிராமரிசம் இருந்து அசுரர்கள் பறித்த வேத புத்தகங்களை ஹயக்ரீவர் தான் மீண்டும் மீட்டு பிராமரிடம் ஒப்படைத்தாராம். அப்படிப்பட்ட ஹயக்ரீவருக்கும் நாம் முறையாக வழிபட்டோம் என்றால் அவர் நமக்கு நல்ல ஞானத்தை பெற்று கொடுப்பாராம். ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். சரி இந்த பதிவில் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தீராத கஷ்டங்கள் தீர்க்கும் நரசிம்ஹர் மந்திரம்..!
படிப்பில் சிறந்து விளங்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க, ஹயக்ரீவருக்கும் முதலில் வணங்கிவிட்டு அதன் பிறகு சரஸ்வதி தேவியை வணங்கினால், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மேலும் ஹயக்ரீவருக்கும், சரஸ்வதி தேவிக்கும் உள்ள மூல மந்திரத்தை குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்ய வைத்து தினமும் அந்த மந்திரத்தை ஒரு முறை செல்லி வந்தால் ஹயக்கிரீவர் மற்றும் சரஸ்வதி தேவியின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
அதேபோல் புதன்கிழமை புதன் ஹோரையில் வீட்டில் விளக்கேற்றி வைப்பதன் மூலம் புதன் பகவானுடைய அருள் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும். புதன் பகவான் புத்தி காரகன் என்பார்கள் ஆக புதன் கிழமை புதன் ஹோரையில் குழந்தைகள் கையால் விளக்கு ஏற்றி வைக்க சொல்லுங்கள்.
குரு பகவானுடைய அருள் இருந்தாலும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் ஆக குரு பகவானுடைய கிழமையான வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் சிறந்து வழங்குவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சரஸ்வதியின் மூல மந்திரம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |