பணம் சேர என்ன வழி
பணத்தை பொறுத்தவரை ஒருவருக்கும் எவ்வளவு இருந்தாலும் அது போதுமான ஒன்றாக இருக்காது. ஏனென்றால் பணம் என்பது அனைத்திற்கும் முக்கியமான ஒன்றாக இருப்பதனால் இதனை யாரும் போதும் என்று கூறுவது இல்லை. பணம் இருபவர்களே இவ்வாறு நினைத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த நிலையில் இருந்து எப்படி மீண்டு வருவது என்றும், பணம் சேர என்ன வழி என்றும் தான் சிந்திப்பார்கள். இத்தகைய முறையில் யோசித்துவிட்டு உடனே ஆன்மீகத்தில் என்ன செய்யலாம் என்று தான் யோசிப்பார்கள். அதனால் இன்று இவர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதுவும் கல் உப்பு பரிகாரம். ஆகையால் கஷ்டம் நீங்கி பணம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை தெரிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பண கஷ்டம் தீர செல்வம் பெருக பரிகாரம்:
வீட்டில் உள்ள பண கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று பெண்கள் பல கோவிலுக்கு என்று வேண்டுதல் வைப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் விரதமும் இருப்பார்கள்.
இனி இது மாதிரி எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய வீட்டில் உள்ள கல் உப்பினை மட்டும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தாலே போதும்.
செல்வ செழிப்பு உண்டாக ரொம்ப இல்லங்க 5 ரூபாய் பச்சை கற்பூரத்துடன் 2 ஏலக்காயை சேர்த்து வைய்யுங்க
பரிகாரம்- 1
கல் உப்பு ஆன்மீகத்தில் செல்வங்களை அள்ளித்தரும் ஒரு லட்சுமி கடாட்சம் பொருளாக கருதப்படுகிறது. அதேபோல் இது மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்றும் கூறிகிறார்கள்.
அதனால் கல் உப்பினை எப்போதும் பீங்கான் ஜாடியில் தான் இருக்க வேண்டும். மேலும் கல் உப்பு ஜாடி குறையாமல் பார்க்க வேண்டும்.
எனவே கல் உப்பு ஜாடியினை வைப்பதற்கு முன்பாக அதன் கீழே 1 ரூபாய் நாணயத்தை வைத்து விட்டு அதன் பிறகு கல் உப்பு ஜாடியினை வைக்க வேண்டும்.
பரிகாரம்- 2
இவ்வாறு வைத்த பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் 1 விரலி மஞ்சள் மற்றும் 1 வசம்பினை அதன் உள்ளே வைத்து மேலே கல் உப்பினை நிரப்பி உங்களுடைய பூஜை அறை அல்லது சமையல் அறையில் மறைத்து வைத்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்த முடித்த பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடுங்கள்.
தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்..
பரிகாரம் செய்யும் நாள்:
கல் உப்பு பரிகாரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் காலை 6 முதல் 7 மணி வரை அல்லது மாலை 6 முதல் 7 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும்.
மேலும் 48 நாட்கள் கழித்த பிறகு கண்ணாடி பாட்டிலில் இருக்கும் உப்பினை நீர் ஓடைகளில் கரைத்து விடுங்கள். இத்தகைய கல் உப்பு பரிகாரத்தை செய்து முடித்து விட்டு பணம் சேர செய்ய வேண்டிய முயற்சியும் செய்தால் பணம் கஷ்டம் நீங்கி செல்வம் சேரும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |