பணம் வரவை அதிகரிக்க ஏலக்காயை இந்த இடத்தில் வையுங்கள்..!

Advertisement

பணம் வரவு அதிகரிக்க ஏலக்காய் – Panam Vara Pariharam

நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் என்னதான் வருடம் முழுவதும் குடுப்பத்திற்காக உழைத்தாலும். நாம் சம்பாரிக்கும் பணமானது ஏதாவது விரைய செலவு ஆகிக்கொண்டே இருக்கும் அல்லது பணம் கஷ்டம் என்பது இருக்கும். பணம் என்பது நம்மிடம் ஓரளவு இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக வாழ முடியும். ஆக நமது வீட்டில் பணப் புழக்கம் அதிகமாவதற்கும், பணம் அதிகமாக சேருவதற்காகவும் சிறிய பூஜை, பரிகாரங்கள், ஆன்மீக சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வந்தாலே போதும் ஆன்மீக பண தேவை என்பதை இல்லாத அளவிற்கு நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பொதுவாக நமக்கு செல்வம் பெறுக சுக்கிர பகவானின் அருள் நிச்சயம் தேவை. ஆக சுக்கிரன் பகவானுக்கு உகந்த விஷயங்களை செய்தாலே போதும் நமது வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும். ஆக சுக்கிரன் பகவானுக்கு உகந்த பரிகாரம் மற்றும் சில பரிகாரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நினைத்து பார்க்க முடியாத செல்வ நிலையை அடைய இந்த பரிகாரம் பண்ணுங்க போதும் ….

பரிகாரம் – Panam Vara Pariharam:ஏலக்காய்

இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளி கிழமை அன்று மட்டும் தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய் ஐந்து தேவைப்படும். இந்த ஐந்து ஏலக்காயை நீங்கள் பணம் வைக்கும் பிரோல், ஹேண்ட் பேக், மணி பர்ஸ் போன்றவற்றில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.

அதேபோல் இந்த ஏலக்காயை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாற்றிவிட வேண்டும். பிறகு பழைய ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டுவிடுங்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாது.

இந்த பரிகாரமானது பணம் வரவை அதிகரிக்க கூடியது. மேலும் ஏலக்காய் சுக்கிரன் பகவானுக்கு உகந்தது பொருள். ஆக இந்த பொருளை இருக்கும் இடத்தில் பணம் ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும். ஆகையால் இந்த பொருளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள். பணம் இருக்க கூடிய யோகத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. கண்டிப்பாக இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் வற்றாத பணவரவை ஏற்படுத்தும் 5 ரூபாய் கடுகு பரிகாரம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement