பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மட்டும்..!

Advertisement

Palli Vilum Palan in Tamil for Male

பொதுவாக நமது உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் சில சமயம் பல்லி விழலாம். பல்லி நம் உடல் பாகங்களில் விழுவதால் மூலமாக கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறைத்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். பல்லி விழும் பலன்கள் பொதுவாக ஆண்கள் பெண்கள் என பிரிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் பல்லி விழும் பலன்கள் ஆண்களுக்கு எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்த ஆன்மிக தகவலை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

நம்மில் பலர் பல்லி விழும் பலன் மூடநம்பிக்கை என்று கூறுவது உண்டு அதேபோல் அதிகப்படியான மக்கள் நம் உடலில் பல்லி விழுந்தவுடன் அதற்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் பல்லி விழும் பலனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு பல்லி விழும் பலன்கள் எப்படி கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஜோதிடத்தில் பல்லி  விழும் பலன்கள் என்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது அதில் நம்முடைய உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுகிறதோ அதற்கேற்ற பலன் நமக்கு கிடைக்கும். இந்த பதிவில் ஆண்களுக்கு பல்லி விழும் பலன் எப்படி கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

பல்லி விழும் பலன் ஆண்கள் – Palli Vilum Palan Aangal

Palli Vilum Palan

தலை:

ஆண்களின் தலையில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்தால் அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து தொல்லை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

முகம்:

ஆண்களின் முகத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு எதிர்பாராத செல்வம் வந்தடையும். தனவரவு மேம்படும் என்று பொருள்.

இடது கண்:

ஆணின் இடது கண் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி ஓன்று தேடி வரும்.

வலது கண்:

ஆணின் வலது கண்ணில் பல்லி விழுந்தால் அவரின் முயற்சி தோல்வி அடைய வாய்ப்புள்ளது. அவர் உடனே குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோமதி சக்கரம் பலன்கள் மற்றும் வழிபாடும் முறை

நெற்றி:

ஆண்களின் வெற்றி மீது பல்லி விழுந்தால் அவர் தன் மனைவி அல்லது துணையை விட்டு பிரிந்து செல்லும் சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்த்துகிறது.

இடது காது:

ஆண்களின் இடது காது மீது பல்லி விழுந்தால், அவருக்கு விரைவில் அதிக பணம் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

மேல் உதடு:

ஆண்களுடைய மேல் உதடு மீது பல்லி விழுந்தால் அவருக்கு விரைவில் சண்டை சச்சரவால் பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

கீழ் உதடு:

ஆணின் கீழ் உதடு மீது பல்லி விழுந்தால் அவருக்கு இதுவரை இருந்த பொருளாதாரத் தடைகள் நீங்கி பணம் பெருகும் என்று அர்த்தம்.

உதடு:

ஆண்களுடைய இரண்டு உதடுகள் மீதும் பல்லி விழுந்தால் அவருக்கு ஒரு மரண செய்து வந்து சேர வாய்ப்பு உள்ளது.

வாய்:

ஆண்களின் வாய் பகுதியில் பல்லி விழுந்தால் அவரின் ஆரோக்யம் பதிக்கப்படலாம். அதனால் உடல் நலத்தில் கவனம் தேவை.

முதுகின் இடது பக்கம்:

ஆணின் முதுகின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் அந்த நபருக்கு கூடிய விரைவில் நலன் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொருள்.

மணிக்கட்டு:

ஆணின் மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால் அவருடைய வீட்டை அழகுபடுத்தக்கூடிய, பராமரிக்கக்கூடிய வேலைகளில் ஈடுபட உள்ளீர்கள் என்று பொருள்.

கை:

ஆணின் கையில் பள்ளி விழுந்தால் நீங்கள் பெரிய அளவில் பணம் பரிவர்த்தனை செய்வீர்கள். அதன் மூலம் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருள்.

விரல்:

ஆணின் விரலில் பல்லி விழுந்தால் உங்களின் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உள்ளது என்று பொருள்.

இடது கை:

ஆண்களின் இடது கையில் பல்லி விழுந்தால் உங்களுக்கு அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வலது கை:

ஆணின் வலது கையில் பல்லி விழுந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் வரப்போகிறது என அர்த்தம்.

மீசை:

மீசையில் பல்லி விழுந்தால் உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தலை:

தலையில் பல்லி விழுந்தால் அது மரண பயம் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் உடனே அருகில் உள்ள கோவில் குளத்திற்கு சென்று கால் கழுவி, இறைவனை வழிபட்டு வரவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிறந்த தேதி பலன்கள்

பாதம்:

ஆண்களின் பாதத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு சவாலான வாழ்கை மாறி நன்மை உண்டாக்கும்.

கெண்டை கால்:

ஆண்களின் கெண்டை கால் பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் பயம் அல்லது சுற்றுலா சென்று  வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

கால்:

ஆண்களின் காலில் உள்ள விரல்களின் மீது பல்லி விழுந்தால் உங்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement