பிரதமை திதி பலன்கள் | Prathamai Tithi Good or Bad in Tamil

Advertisement

பிரதமை திதியில் என்ன செய்யலாம்?

Prathamai Tithi Good or Bad in Tamil:- ஜோதிடம் என்பது மிக பெரிய கடலாகும்.. இத்தகைய ஜோதிடம் கலையை கற்றுக்கொள்வதற்கு பொதுவாக அனைருக்கும் கற்றுக்கொள்ள அதிக ஆசைகள் இருந்தாலும், அனைவருமே சிறந்த ஜோதிடராக முடியாது. நமது நாள்கட்டியல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான திதி பட்டிருக்கும் அல்லவா? அந்த திதிகளில் ஒன்று தான் பிரதமை திதி. இந்த பிரதமை திதியில் நாம் என்ன செய்யலாம்? என்ன விஷயங்களை செய்யக்கூடாது? இது போன்று பிரதமை திதி பலன்கள் பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

பிரதமை திதியில் என்ன செய்யலாம்?

இந்த பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவாதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அதாவது அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

பிரதமை திதி என்றால் என்ன?

பிரதமை திதியை, பாட்டியம் என்று சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு, சந்திரன் குறைவதை, அவ்வாறு சொல்வார்கள்.

அமாவாசையாக இருந்தாலும், பவுர்ணமியாக இருந்தாலும், அடுத்த நாள் பிரதமை திதி. இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்

பிரதமை திதி பலன்கள் – Prathamai Tithi Good or Bad in Tamil:

பொதுவாக பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். ஏனென்றால் அமாவாசையிலோ, பவுர்ணர்மியிலோ, பூமியில் கதிர்வீச்சின் தன்மையும், ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும், ஆனால் பிரதமை திதியில் கதிர்வீச்சு குன்றுவதால், எந்த சுபகாரியங்களும் செய்யகூடாது என்பது ஜோதிட சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த தினத்தில் போர் பிரகடனம் செய்யவோ, கோமாதா என்றழைக்ககூடிய பசு வாங்கவோ உகந்த நாளாகும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், அமாவாசையைத் தாண்டுவார்களா என்று எதை வைத்துக் கூறுகின்றனர்?

இதற்கு என்ன காரணம் என்றால் ஆத்ம காரகன் சூரியன். ஆத்மா என்பது உயிர். உடலுக்குரியவன் சந்திரன். சூரியனும், சந்திரனும் இணைவது, அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது, சீக்கிரமாகவே உயிர் பிரியும்.

அதனால் தான் அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோ காரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும். அதனால் தான் அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.

பிரதமை திதியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்:

பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.  பிரதமை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும். அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்களாக இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement