பிரதோஷ நாளன்று சிவபெருமானை எப்படி வணங்க வேண்டும்..? | பிரதோஷமும் வழிபாடு முறையும்..!

Advertisement

பிரதோஷ வழிபாடு முறை

சிவன் பக்தர்கள் மாதம் தோறும் வரும் பிரதோஷம் அன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தால் வாழ்வில் ஏராளமான நற்பலன்கள் நடக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரதோஷம் அன்று மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவார்கள். சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரதோஷம் அன்று சிவபக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடுவார்கள்.

விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டு உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். பிரதோஷம் அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதையும், சிவபபெருமானை எப்படி வணங்க வேண்டும் என்பதையும் இதனால் கிடைக்கும் நற்பலன்களையும் இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

பிரதோஷம் வகைகள் | Pradosham Types in Tamil

பிரதோஷ வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்த போது வெளி வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். அதைக் கண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கு எதுவும் ஆக கூடாது என அவரின் கண்டத்தில் (கழுத்தில்) கை வைத்து அங்கேயே விஷத்தை நிலைத்திருக்க செய்தார். விஷத்தை உண்டு அனைவரையும் காப்பற்றிய காலம் தான் பிரதோஷ காலம் என்று கூறுகிறோம். அந்த பிரதோஷ காலத்தில் சிவனையும், நந்தியையும் தரிசனம் செய்தால் உங்களுடைய பாவங்களும் தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.

பிரதோஷ நேரம்:

 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.20 மணி முதல் 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும்.  

பிரதோஷ விரதம் இருக்கும் முறை:

சிவ பக்தர்கள் பகல் முழுவதும் சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, பிரதோஷ வேளையில் சிவ தரிசனத்தை முடித்த பிறகு தான் உணவருந்த வேண்டும். அப்படி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் எடுத்து கொள்ளலாம். தொடர்ந்து பிரதோஷ இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.

சிவபெருமானை வணங்கும் முறை:

 

பொதுவாகவே இடமிருந்து வலமாகச் சுற்றி வந்துதான் இறைவனை வணங்குவோம். ஆனால் பிரதோஷ வேளையில், வலமும், இடமும் மாறி மாறி வந்து சிவபெருமானை வணங்க வேண்டும். இதற்கு ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று பெயர். சிவபெருமானுக்கு வில்வ இலை மாலை சாற்றுவது நல்லது.

பிரதோஷ பூஜை:

பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கும் நந்திதேவனுக்கும் அபிசேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதே பிரதோஷ பூஜையாகும். அப்படி வலம் வரும் நேரத்தில் வேதங்களை பாராயணம் செய்தும், நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை வணங்குவார்கள்.

சனி பிரதோஷம்:

சிவபெருமான் விஷம் அருந்தி தெளிந்த பின் சிவபெருமான் ஆடிய நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை தான். அதனால் தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.

நந்திதேவனை வணங்கும் முறை:

நந்திதேவனுக்கு சிவப்பு அரிசி, நெய் விளக்கு, அருகம்புல் மாலை ஆகியவற்றை நந்திக்கு படைக்க வேண்டும். பின்னர் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, ஒரு பிடி அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். இதனால் சனியால் ஏற்படும் இன்னல் விலகும்.

பிரதோஷ வழிபாடு பலன்கள்:

  • வறுமை, பயம், மரண வேதனை போன்ற பிரச்சினைகள் நீங்கும்
  • இன்பம் கிடைக்கும்
  • மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்
  • கடன் நீங்கித் தனம் நிறையும்
  • பாவங்கள் நீங்கும்
  • சொந்த வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

பிரதோஷ அபிசேக பொருட்களும் அதன் பலன்களும்:

  • பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • தயிர் – பல வளமும் உண்டாகும்
  • தேன் – இனிய குரல் கிட்டும்
  •  பழங்கள் – விளைச்சல் பெருகும்
  •  பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
  •  நெய் – முக்தி பேறு கிட்டும்
  • இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்
  • சர்க்கரை _ எதிர்ப்புகள் மறையும்
  • எண்ணெய் – சுகவாழ்வு
  • சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
  •  மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

கிழமைகளும் பிரதோஷ பலன்களும்:

  • ஞாயிறு பிரதோஷம் -சுப மங்களத்தை தரும்
  • திங்கள் சோம பிரதோஷம் – நல் எண்ணம், நல் அருள் தரும்.
  • செவ்வாய் பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
  •  புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்
  •  வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
  • வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்.
  • சனிப் பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்.

பிரதோஷம் நாட்கள் 2025 முழு அட்டவணை

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement