பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகாரம் | Brahmahathi Dosham Pariharam

Brahmahathi Dosham Pariharam

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில் | Brahmahathi Dosham Temple

தோஷங்களில் பல வகையான தோஷங்கள் இருக்கிறது. நாம் இன்றைய ஆன்மீக பதிவில் பிரம்மஹத்தி தோஷம் பற்றிய சில தகவலை படித்து தெரிந்துக்கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எந்த தடைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு தடைகளே வாழ்க்கையாய் அமைந்திருக்கும். இது மாதிரி உள்ளவர்கள் உங்களுடைய ஜாதகத்தை ஜோதிடர்களிடம் கொண்டு போய் பார்த்தால் அவர்கள் ஏதேனும் உங்களுக்கு தோஷம் இருக்கிறதா என்று கணித்து கூறுவார்கள். அந்த வகையில் உங்களுடைய ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் என்ன பரிகாரம், இந்த தோஷம் எதனால் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவதற்கான காரணம்:

 1. ஒரு பெண்ணை காதல் செய்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் போது இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.
 2. மற்றவர்களை அதிக வேலை வாங்கி அவர்களுக்குரிய ஊதியத்தை தராமல் ஏமாற்றும் போது இந்த தோஷம் ஏற்படும்.
 3. கல்வியோ அல்லது எந்த தொழிலோ கற்று தந்தவர்களுக்கு தகுந்த ஊதியம் தராமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுமாம்.
 4. வெள்ளிக்கிழமை அன்று நல்ல பாம்பினை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.
 5. சென்ற பிறவியில் சுவாமி சிலையை திருடியவர், ஆலயத்தை தகர்த்தவர்களுக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.
 6. விஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது, ராவணனைக் கொன்றதால் ராமருக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

பிரம்மஹத்தி தோஷம் விளைவுகள்:

 1. எதிர்பார்க்காத அளவிற்கு தொழிலில் சரிவு ஏற்படுதல், அல்லது அந்த தொழிலை செய்ய முடியாத அளவிற்கு வீழிச்சி அடைதல்.
 2. நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கும்.
 3. திருமண பாக்கியம் கிடைக்காமல் போகும் அல்லது திருமண தடை ஏற்பட்டு கொண்டே போகும்.
 4. சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருத்தல் அல்லது தள்ளி போகும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் 

பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகாரம்:

 1. பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்கு வயதான ஏழை தம்பதிகளுக்கு வயிறு நிறைய உணவு அளித்து புதிய ஆடைகளை எடுத்துக்கொடுத்து அவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
 2. தினமும் பசுமாட்டிற்கு பசுமையான அருகம்புல்லையும், சுத்தமான தண்ணீரையும் கொடுக்க வேண்டும்.
 3. பிரம்மஹத்தி தோஷத்தின் தாக்கம் குறைவதற்கு ஒருமுறை சிவன் ஆலயம் சென்று அங்கப்பிரதட்சணம் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
 4. சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகள் இருக்கக்கூடிய திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்து வர பிரம்மஹத்தி தோஷத்திற்கான தாக்கம் குறைந்துவிடும்.
 5. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்கு சிறந்த திருத்தலம்.
 6. இந்த கோவிலில் பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, இந்த கோவிலின் முன் வாசல் வழியாக நுழைந்து, பின் வாசல் வழியாக வெளியே வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகும்.
 7. ராமநாதபுரம் அருகே இருக்கும் தேவிபட்டினத்தில் கடலுக்குள் இருக்கும் நவக்கிரகங்களை வழிபாடு செய்து, கடலில் மூழ்கி நீராடி, அங்குள்ள பெருமாளை வழிபாடு செய்தாலும் மிகவும் கடுமையாக இருக்கக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி அடையும்.
சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்!!!

ஆலயங்கள் செல்ல முடியாதவர்கள்:

நெடுந்தூரம் ஆலயம் சென்று பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய முடியாதவர்கள் அம்மாவாசை தினங்களில், மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று, சிவபெருமானை 5 முறை வலம் வர வேண்டும். இதேபோல் தொடர்ந்து 9 அமாவாசைக்கு செய்தால், பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்