பிரம்ம முகூர்த்தம் நன்மைகள்
பொதுவாக படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்களிடம் அதிகாலையில் எழுந்து படி என்று கூறுவார்கள். காரணம் அதிகாலையில் எழுந்து படித்தால் நமக்கு படித்தது மறக்காது என்ற காரணத்தால் எழுந்து படிக்க சொல்வார்கள். அதாவது காலை 4 மணி என்பது பிரம்ம முகூர்த்த நேரம் என்பதால் அந்த நேரத்தில் நாம் படித்தது மறக்காமல் இருக்கும் என்பது மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் நாம் எதை மனதார நினைத்து வழிபாடு செய்தாலும் அவை நிச்சியம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமில்லை இன்னும் பல அதிசயங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கிறது. அவை என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன.?
பிரம்மா என்றால் படைத்தல், முகூர்த்தம் என்றால் காலம் எனவே பிரம்மாவின் நேரம் அல்லது புனித நேரம், அல்லது தெய்வீக நேரம் என கூறப்படுகிறது. சூரிய உதயத்திற்கு முன் உள்ள நேரமான அதிகாலை நேரத்தை தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறுகிறோம்.
அதாவது அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரைக்கும் பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகிறோம்.
பிரம்ம முகூர்த்தம் நன்மைகள்:
மனதை ஒருநிலைப்படுத்த:
பிரம்ம முகூர்த்த நேரமானது மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. இந்த நேரத்தில் மனதானது அமைதியாக காணப்படும். அதனால் இந்த நேரத்தில் நீங்கள் முக்கிய முடிவுகளை தீரக்கமாக எடுக்கலாம்.
ஆரோக்கியமாக இருக்க:
மனிதனாக பிறந்த அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழ வேண்டும். நாள் முழுவதும் நாம் வேலையே பார்ப்பதற்கும், உணவு சீராக செரிமான ஆகுவதற்கும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவது சிறந்தது.
பிரம்ம முகூர்த்தம் ரகசியத்தைப் பற்றி தெரியுமா? இதில் ஏன் திருமணம் செய்கிறார்கள் தெரியுமா?
சுத்தமான ஆக்சிஜன்:
அதிகாலையில் எழுவதால் காற்று மாசுபாடு இல்லாமல் சுத்தமாக இருக்கும். அதனால் நீங்கள் இந்த நேரத்தில் எழுந்து தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை செய்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
அறிவை வளர்க்கிறது:
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து படிப்பதால் நமது அறிவு திறம் மேம்படும். மேலும் படித்தவை மறக்காமல் இருக்கும். நமது படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |