புதன் காயத்ரி மந்திரம் | Puthan Gayathri Manthiram in Tamil

Advertisement

புதன் பகவான் காயத்ரி மந்திரம்

ஒன்பது நவகிரகங்களில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் புதன் பகவான். புதன் பகவானுக்கு உகந்த புதன்கிழமையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் புதன் ஓரை. புதன்கிழமை நாளில், புதன் ஓரையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார் புதன் பகவான்.

குறிப்பாக புதன் கிழமைகளில் புதன் பகவானை வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் உயரலாம் என்பது மக்களின் நம்பிக்கை. நம்மிடைய வீட்டில் புதன் பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுவது என்பது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்பது நம்பிக்கை. இவ்வாறு புதனை வழிபாடும் போது புதன் பகவானுக்கு உரிய காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் இன்னும் கோடி நன்மைகளை பெறலாம்.

சரி இன்றிய பதிவில் புதன் பகவானுக்கு உரிய காயத்திரி மந்திரம் சிலவற்றை இங்கு நாம் காணலாம் வாங்க..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!

புதன் பகவான் ஸ்லோகம்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தத்தாள்வாய் பன்னொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி !

புதன் கிழமைகளில் அருகில் உள்ள கோயிலிற்கு சென்று நவகிரக சன்னதியில் புதன் பகவானை வணங்கி இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக புதன் பகவானின் அருள் கிடைக்கும்.

புதன் காயத்ரி மந்திரம் – Puthan Gayathri Manthiram in Tamil:

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத் !

புதன் பகவானை வீட்டில் அல்லது கோவிலில் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். அவ்வாறு வழிபாடும் போது மேல் கூறப்பட்டுள்ள மந்திரத்தை ஜெபித்து, கோவிலாக இருந்தால் நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்.

வழிபாட்டுக்கு ஏற்ற நாள், நேரம்

புதன்கிழமையில், புதன் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரையிலும் புதினா பகவானை வழிபட ஏற்ற நாள் மற்றும் நேரம் ஆகும்.

புதன் பகவானுக்கு உகந்த நிறம்:

புதன் பகவானுக்கு பிடித்த நிறம் எது தெரியுமா? பச்சை நிறம் ஆகும். ஆக உங்களிடம் பச்சை நிறத்தில் உடை இருந்தால் அதனை அணிந்து கொண்டு புதனை வழிபடலாம், இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அதே போல் புதனுக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் வாங்கி கொடுக்கலாம் இதுவும் நல்ல பலன்களை பெற்று தரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வராஹி மூல மந்திரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement