இறைவனுக்கு உகந்த மலர்கள் | Kadavulukku Ugantha Malargal
இறைவனுக்கு பூஜை செய்யும் போது விளக்கு, சூடம், பத்தி, மஞ்சள், குங்குமம் முக்கிய பங்கு வகிப்பதை போல பூக்களும் இன்றியமையாததாக உள்ளது. நம்முடைய பூஜைக்கு சற்று அழகை கூட்டுவது என்றால் அது பூக்கள் தான். மலரில் உள்ள வாசனையும், அதன் தோற்றமும் கடவுளை தரிசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். நாம் கடவுளை வணங்கும் போது அந்தந்த கடவுளுக்கு உரிய பூக்களை கொண்டு வழிபட்டால் நமக்கு நன்மைகள் சற்று அதிகமாக கிடைக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் எந்தெந்த கடவுளுக்கு என்ன மாதிரியான பூக்களை சமர்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
விநாயகர்:
- பூஜைக்கு உகந்த மலர்கள்: பிள்ளையாருக்கு சிவப்பு நிறத்தில் உள்ள பூக்களை வைத்து வழிபடலாம். அதிலும் குறிப்பாக செம்பருத்தி பூவை வைத்து வழிபட்டால் சற்று கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
- மேலும் விநாயகருக்கு மல்லிகை, தாமரை, ரோஜா, சம்மங்கி, அருகம்புல், வில்வ இலை முதலானவற்றையும் வைத்து பூஜை செய்யலாம். கணபதி பூஜை செய்யும் போது 21 விதமான பூக்கள் மற்றும் இலைகள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தாழம்பூ, துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.
முருகன்:
- Kadavulukku Ugantha Malargal: கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்படும் முருகனுக்கு சிவப்பு நிற அரளி, செம்பருத்தி, கனகாம்பரம், சிவப்பு நிற ரோஜா மற்றும் வெள்ளை நிற பூக்களை வைத்து பூஜை செய்வது சிறந்தது.
சிவன்:
- அர்ச்சனை மலர்கள்: முழுமுதற் கடவுளான சிவ பெருமானுக்கு வெள்ளை நிறத்தில் உள்ள மலர்கள் மிகவும் உகந்தது. மகிழம்பூ, நீல நிற தாமரை, இளஞ்சிவப்பு நிற தாமரை, வெள்ளை தாமரை, செவ்வரளி, ஊமத்தம் பூ, பாரிஜாதம், எருக்கம் பூ போன்றவற்றை வைத்து பூஜை செய்தால் இல்லத்தில் எந்த பிரச்சனைகளும் வராது.
- வில்வ இலை, கம்பு, தானியம் போன்றவற்றையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம். சிவனுக்குத் தாழம்பூ கூடாது. சிவனுக்குப் படைக்கும் எல்லா மலர்களும் பார்வதி தேவிக்கு உகந்த மலர்கள்.
துர்க்கை:
- அர்ச்சனை செய்யும் பூக்கள்: தாமரை, மல்லிகை, அரளி போன்ற பூக்களை துர்க்கைக்கு வைத்து பூஜை செய்யலாம். வில்வ இலையையும் உபயோகப்படுத்தலாம்.
விஷ்ணு:
- பூஜைக்கு உகந்த மலர்கள்: சாமந்தி பூ, குண்டு மல்லி, தாமரை, மல்லிகை, சம்பங்கி, வெள்ளை கதம்ப பூக்கள் வைத்து விஷ்ணுவை வழிபட வேண்டும். துளசி இலை இவருக்கு உகந்தது என்பதால் துளசியை மாலையாக செய்து வழிபடலாம். விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.
மகாலட்சுமி:
- Poojaikku Ugantha Malargal: இந்த கடவுளுக்கு உகந்த மலர் நாட்டு ரோஜா, தாமரை, சம்பங்கி, பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். லட்சுமிக்குத் தும்பை வைத்து வணங்க கூடாது.
ஆஞ்சநேயர்:
- அனுமனுக்கு மல்லிகை, துளசி மாலை, எருக்கம் பூவை வைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ணன்:
- அர்ச்சனை செய்யப்படும் மலர்கள்: துளசி இலை, நீல நிற தாமரை, நந்தியாவட்டை, பாரிஜாதம் போன்ற மலர்களை கிருஷ்ணருக்கு வைத்து வழிபடலாம்.
பிரம்மன்:
- நந்தியாவட்டை மற்றும் வெள்ளை நிற மலர்களை வைத்து பூஜை செய்யலாம்.
மகா காளி:
- கடவுள் மகா காளிக்கு மஞ்சள் நிற அரளி சமர்பிக்கலாம்.
சனி பகவான்:
- Poojaikku Ugantha Malargal: நீல நிற பூவான சங்கு பூவை சனீஸ்வரருக்கு வைத்து பூஜை செய்யலாம். இந்த கடவுளுக்கு சனிக்கிழமையில் பூஜை செய்வது நல்லது.
- வெண்மையான பூக்கள் வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். சிவப்பு வர்ணப் பூக்கள் இராஜ குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இன்பங்களை பெறலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |