பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் பணம் வரவு அதிகமாகும்..!

Advertisement

பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா? How to put Mirror in Pooja Room

நமது வீடுகளில் சாமி படங்கள் வைப்பது எவ்வளவு முக்கியமோ.. அதேபோல் தான் இந்த கண்ணாடி வைத்து வழிபடுவதும் முக்கியமான விஷயம் ஆகும். இந்த கண்ணடி வைப்பது ஏன் என்றால். பொதுவாக பெரும்பாலான வீடுகளில் அவர்களுடைய குலதெய்வத்தையோ, முன்னோர்களின் படங்களையோ வைத்து வழிபட மாட்டார்கள். ஆக அப்படி பட்டவரக்ள் பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடும் போது. வீட்டிற்குள் வரும் குலதெய்வமோ அல்லது முன்னோர்களோ அதனை பார்க்கும் போது அவர்களுடைய விம்பம் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது, இன்னமும் நம்மை மறக்காமல் நமது குடும்பத்தில் வழிபாடு செய்து வராங்கன்னு சந்தோசப்படுவாங்க.

மேலும் அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும். மேலும் பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவத்தினால் நம்வீட்டில் இருக்கும் அத்துணை கண் திருஷ்டியும் விலகிவிடும். இது போக பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியில் எது அதிகமாக பிரதிபலிக்கின்றதோ அது பன்மடங்கு அதிகரிக்கும். சரி பூஜை அறையில் நீங்கள் முதல் முதலாக கண்ணாடி வைக்க போறீங்க அப்படின்னா அதை எப்படி செய்ய வேண்டும், எந்த கிழமையில் செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

பூஜை அறையில் கண்ணாடி வைக்க உகந்த கிழமை:

பூஜை அறையில் கண்ணாடி வைப்பதற்கு உகந்த கிழமை புதன் கிழமை ஆகும். ஆக புதன் கிழமை காலை எழுத்து குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் விளக்கேற்றிய பிறகு பூஜை அறையில் கண்ணாடியை வைக்க வேண்டும்.

கண்ணாடியை வைப்பதற்கு முன்பு அந்த கண்ணடிக்கு குங்குமம் வைக்க வேண்டும். ஆக ஒரு கிண்ணத்தில் சிறிதளவு குங்குமம் எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுகி போடவும், பிறகு அதில் சிறிதளவு பன்னீர் ஊற்றி கலந்து குழைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அந்த குங்குமத்தை கண்ணாடியில் வைத்துவிடுங்கள். மேல் படத்தில் காட்டியுள்ளது போல் தான் குங்குமத்தை வைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
படுக்கை அறை வாஸ்து – கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

பிறகு அந்த கண்ணாடியின் பக்கத்தில் ஒரு கண்ணாடி பவுலை வைக்கவும், அந்த கண்ணாடி பவுலில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து அந்த 100 ரூபாய் நோட்டின் மேல் 7 மஞ்சள் கிழங்கை வைக்க வேண்டும், பிறகு அதனுடன் 7 ஏலக்காயை வைக்க வேண்டும். அதேபோல்  7 பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும்.

பின்பு ஐந்து ரூபாய் நாணயம் உங்களிடம் எவ்வளவு இருந்தாலும் சரி உங்களால் முடிந்த அளவிற்கு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் கண்ணாடி பவுலில் அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

கண்ணாடி பவுலில் வைத்திருக்கும் மஞ்சள், ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருளுக்குமே தனத்தை பெருக்கும் சக்தி அதிகமாகும், பணம் வரவை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும், மற்றவர்களிடம் இருந்து வராத பணம் கூடிய விரைவில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

குறிப்பு:

பூஜை அறையில் வைக்கப்படும் கண்ணாடி புதிதாக வாங்க வேண்டும், ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய கண்ணாடியை பூஜை அறையில் வைக்க கூடாது.

வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை அன்று மட்டும் கண்ணடியை சுத்தமாக கழுவி விட்டு மீண்டும் குங்குமத்தால் மேல் கூறப்பட்டுள்ளது போல் குங்குமம் வைக்க வேண்டும்.

கண்ணாடி பவுலில் வைத்திருக்கும் ஏலக்காயை மட்டும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும், பழைய ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டுவிடவும்.

பச்சை கற்பூரம் காற்றில் கரைந்துவிடும் என்பதால் பச்சை கற்பூரத்தையும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி வைக்கவும். மற்றபடி வேறு எதையும் நீங்கள் மாற்ற வேண்டாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

பூஜை அறையில் கண்ணாடி வைக்கும் திசை?

உங்கள் வீட்டில் பூஜை அறை எந்த திசையில் அமைத்துள்ளது அந்த திசையில் கண்ணடியை வைக்கலாம்.

பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

பொதுவாக பலருக்கு எழும் கேள்வி இது பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா? வைக்க கூடாது என்று.. பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாம். அதன் மூலம் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

பூஜை அறையில் கண்ணாடி எங்கே வைக்க வேண்டும்?

பொதுவாக பூஜை அறையில் கண்ணாடியை நடுப்பகுதியில் வைப்பது நற்பலன்களை அள்ளித்தரும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement