பெரிய வியாழன் பாடல்கள்..!

Advertisement

பெரிய வியாழன் பாடல்கள்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பெரிய வியாழன் பாடல்கள் பற்றி பார்க்கலாம். பெரிய வியாழன் புனித வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய வியாழன் என்பது, கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவு கூறும் நாளாகும். இந்நாள் உயிர்ப்பு ஞாயிற்றுக்கு முன் வரும் வியாழன் கிழமை அன்று கொண்டாடுகிறது.

பெரிய வியாழன் ஆனது, இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாள் தம் சீடர்களோடு இரவு உணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. அன்றைய தினத்தில் கிருத்தவர்கள் வியாழன் பாடல்கள் பாடி பிராத்தனை செய்வார்கள். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

பெரிய வியாழன் என்றால் என்ன?

Maundy Thursday Songs in Tamil:

பெரிய வியாழன் பாடல்கள்

திருவழிபாடலானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:

  1. இறைவார்த்தை வழிபாடு
  2. பாதம் கழுவும் சடங்கு
  3. நற்கருணை வழிபாடு
  4. நற்கருணை இடமாற்றம் பவனி.

1.இறைவார்த்தை வழிபாடு – தியானப்பாடல்

நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்ளல் அன்றோ!

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.

ஆண்டவர் தம் அடியாரின் மரணம்
அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்
ஆண்டவருடைய திருப்பெயரை கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்
அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

2. பாதம் கழுவும் சடங்கு:

“ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?”
அதற்கு இயேசு: “நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை” என்றார்.

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
“ஆண்டவரே, நீரோ என் பாதகங்களைக் கழுவவது?”

அதற்கு இயேசு: “நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை” என்றார்.
“நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்.”

“ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?”
அதற்கு இயேசு: “நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை” என்றார்.

3.நற்கருணை வழிபாடு:

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2

கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்.

4.நற்கருணை இடமாற்றம்:

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement