Perumalukku Ugantha Naal in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் ஆன்மீகம் பதிவின் வாயிலாக ஆன்மீக பக்தர்களுக்கு பல பயனுள்ள தகவல்களை கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நம் இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள். அதில் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் மீது அதீத பற்று இருக்கும்.
அதுபோல நாம் அனைத்து கோவில்களுக்கும் செல்வோம். அதிலும் சிலர் தினமும் கோவிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் விஷேச நாட்களில் மட்டும் கோவில்களுக்கு செல்வார்கள். அதுபோல ஒரு சிலர் அந்த கடவுளுக்கு உகந்த நாளில் மட்டும் கோவில்களுக்கு செல்வார்கள். அப்படி ஒவ்வொரு கடவுள்களுக்கும் உகந்த நாட்கள் பற்றி நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக பெருமாளுக்கு உகந்த நாள் எது என்று தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
முருக பெருமானுக்கு உகந்த நாள் எதுன்னு தெரியுமா
பெருமாளுக்கு உகந்த நாள் எது..?
பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்போம். நாம் பெரும்பாலும் எல்லா கிழைமைகளிலும் அல்லது கோவில் திறந்திருக்கும் போது என்று கோவில்களுக்கு சென்றிருப்போம்.
ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்று ஓன்று உள்ளது. அந்த நாளில் நாம் பெருமாள் கோவில்களுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் நம்மில் பலருக்கும் பெருமாளுக்கு உகந்த நாள் எது என்று சரியாக தெரியாது. அதனால் இப்பதிவின் மூலம் பெருமாளுக்கு உகந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவில்களுக்கு எல்லா நாட்களிலும் செல்வோம். ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்றால் அது சனிக்கிழமை தான். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிகளுக்கு சென்றால் சகல செல்வங்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம்.
சிவ பெருமானுக்கு உகந்த நாள் இது தானா
பெருமாள் கோவிலில் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு சனிக்கிழமையானது பெருமாளுக்கு உகந்த நாளாக இருக்கிறது.
மேலும் சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்கவும் இந்த சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களுக்கு செல்லலாம்.
பெருமாளுக்கு உகந்த பூ:
பெருமாளுக்கு உகந்த பொருட்களில் ஓன்று தான் துளசி. மேலும் பெருமாளுக்கு பவளமல்லி பூ உகந்த பூவாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பெருமாளுக்கு துளசியில் மாலை கட்டி போட்டு வழிபாட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |