Advertisement
மாசி மாதம் சிறப்புகள் | Masi Month Special in Tamil
மாசி மாதம் என்றாலே வழிபாடுகள் செய்யவும், புதிதாக கல்வி பயில தொடங்கும் மாதமாகும். இந்த மாதத்தில் வரக்கூடிய 30 நாட்களுமே மிக சிறப்பு வாய்ந்தவை தான். இந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணுவாக திருமால் அவதாரம் எடுத்தது. மாசி மாதத்தில் நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டு தொடங்கும் செயல்கள் அனைத்தும் கண்டிப்பாக நல்ல பலனை பெற்று தரும். வாங்க மேலும் மாசி மாதத்தில் இருக்கக்கூடிய சிறப்புகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
தை மாத சிறப்புகள் |
மாசி மாதத்தின் சிறப்புகள்:
- மாசி மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலி பண்டிகை, ஏகாதசி விரதம், மஹாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி போன்ற சிறப்புமிக்க வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- திருமணமான பெண்கள் இந்த மாசி மாதத்தில் தான் தாலி கயிற்றினை மாற்றி கொள்கிறார்கள்.
- மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதம் மேற்கொன்டு அருகம்புல் மாலை சார்த்தி வழிபாடு செய்து வந்தால் தங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து தோஷங்களும் நீங்கும்.
- இந்த மாதத்தில் பெரும்பாலும் திருமண சுப நிகழ்ச்சிகள், வீடு கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியம் நடைபெறும்.
- ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.
- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவே வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
- ஏழை எளியவர்களுக்கு மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு இந்த மாதத்தில் உணவு கொடுப்பது மூன்று மடங்கு பலன்களை அள்ளித்தரும்.
- பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.
- மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று விரதம் இருப்பது உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்குமாம்.
- மாசிமாதப் பௌர்ணமி தினத்தில் வடஇந்தியாவில் ஹோலிப்பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- உயர் நிலை படிப்பு பயில விரும்புபவர்கள் மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
- திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், கன்னிப் பெண்கள் நல்ல திருமண பேற்றினையும் வேண்டி இவ்விரத முறையை பின்பற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
- ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாசி மாதத்தில் அமிர்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் மாசி மாதம் முழுவதும் கோவில்களைச் சார்ந்த நீர்நிலைகளில் புனித நீராடல் மேற்கொள்ளப்படுகிறது.
- மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்கு உகந்த மாதமாகும். எனவே இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement