ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Month Rasi Palan in Tamil

மாத ராசிபலன் | Monthly Rasi Palan | மார்கழி மாத ராசி பலன் 2022

Matha Rasi Palan: வணக்கம் ஆன்மீக அன்பர்களே..! 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிகளுக்கும் இந்த மாதம் முழுவதும் அவர்களுடைய ராசிக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுவோம். ஒவ்வொருவருக்கும் மனதில் இந்த மாதம் பிறந்துவிட்டது, இந்த மாதத்தில் நமக்கு என்னென்ன நடக்க போகிறதோ என்று மனதிலே பொலம்பிக் கொள்வார்கள். இந்த மாதம் நாம் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறுமா? மாத ராசி பலன் (matha rasi palan) படிக்க ஆர்வம் உள்ள ஆன்மீக அன்பர்களுக்கு இந்த பதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேஷ ராசி முதல் மீன ராசி வரை இந்த ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு எந்த ராசியோ அதற்கான பலனை நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இந்த வார ராசிபலன்

மேஷ ராசி மாத பலன்:

மேஷ ராசி மாத பலன்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் நற்பலன்களை வாரி வழங்கும். படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரம் தொடர்பாக இந்த மாதத்தில் பேசும் போது நல்ல முடிவு கிடைக்கும். இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் தங்கள் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்க வாய்ப்புகள் உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் இறுதியில் நல்ல வரன் அமையும். மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானம் ஓரளவு நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். மேலும் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ரிஷப ராசி மாத பலன்

ரிஷப ராசி மாத பலன்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதத்தில் பல புதிய மாற்றங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதம் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் உங்களுக்கு வெவ்வேறு முடிவுகளைத் தரும். தொழில் பார்வையில், இந்த மாதம் சாதகமாக இருக்கும். ஆனால் இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் மீது ஆணவம் அல்லது பெருமை கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் காதல் விவகாரங்களுக்கு, ஜனவரி மாதம் கலவையான முடிவுகளைத் தரும். கணவன் மனைவி உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் பொறுத்தவரை இந்த ஜனவரி மாத்தில் உடல் நலம் நன்றாக இருக்கும்.

மிதுன ராசி மாத பலன்:

மிதுன ராசி மாத பலன்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கும். அலுவகத்தில் வேலை செய்ப்பவர்களுக்கு கலவையான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், இந்த நேரத்தை அதிகபட்சமாக பயன்படுத்தி எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாத வாறு பார்த்துக்கொள்வது நல்லது. உங்கள் காதல் விவகாரங்களுக்கு, ஜனவரி மாதம் நல்ல பலன்களைத் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். இருப்பினும் தங்களுக்கு நிறுமணம் ஆகியிருந்தால் தங்களது திருமணம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடக ராசி மாத பலன்கள்:

கடக ராசி மாத பலன்கள்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் அதிக கவலையை கொடுக்கும். இந்த மாதத்தில் உங்கள் வழக்கை சம்மந்தமாக பல சவாலான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இந்த மாதத்தில் தங்கள் தொழில் ரீதியாக கலவையான முடிவுகளைத் தருகிறது. இந்த நேரத்தில், பெரும்பாலான வேலைகளைச் செய்யும் நபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படிக்கும் மாணவ செல்வங்களுக்கு ஜனவரி மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். இருப்பினும் இந்த ஜனவரி மாதம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய ராசி பலன்கள் 2021

சிம்ம ராசி மாத பலன்:

சிம்ம ராசி மாத பலன் சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் பல முக்கியமான மாற்றங்களைக் கொடுக்கும். குறிப்பாக தங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகளை பெற்று தரும். சிம்ம ராசியின் மாணவர்களுக்கு, 2022 ஆம் ஆண்டின் முதல் மாதத்தின் ஆரம்பம் மிகவும் நன்றாக இருக்கும். கல்வி சிறந்து விளங்குவார்கள். தங்கள் காதல் விஷயங்களில் உங்கள் உறவில் மிகவும் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த மாதம் உங்கள் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இல்லாது. தங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

கன்னி ராசி மாத பலன்:

கன்னி ராசி மாத பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை தொழில் ரீதியாக இந்த மாதம் நன்றாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் மந்தமான மாதமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தங்கள் திருமணம் வாழ்க்கையில் இருவரும் சாதாரணமாக இருப்பீர்கள். தங்களது ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி மாத பலன்:

துலாம் ராசி மாத பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் அதிக கவலைகளை கொடுக்கும் மாதமாக இருக்கும். தொழில் பார்வையில், 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இயல்பை விட சாதகமாக இருக்கும். இந்த ஜனவரி மாதம் தாக்கல் காதல் விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனவரி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமானதாக இருக்கும். ஆரோக்கியம் பொறுத்தவரை உங்கள் மனதில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம் மாத பலன்கள்:

விருச்சிகம் மாத பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதி நிலை காணப்படும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.  பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவரவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரியை அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். 

நாளைய ராசி பலன்

தனுசு ராசி மாத பலன்கள்:

தனுசு ராசி மாத பலன்கள்

இந்த மாதம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். உறவினர் வருகை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலைமை பொறுத்தவரை லாபம் அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். தலைவலி போன்ற உபாதைகள் வரக்கூடும்.

மகர ராசி இந்த மாத பலன்:

மகர ராசி மாத பலன்

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும். சிலர் இறை வழிபாட்டில் மனதை செலுத்துவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும், லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணியை சிறப்பாக செய்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற கடின உழைப்பு தேவை.

கும்பம் மாத ராசி பலன்:

கும்பம் மாத ராசி பலன்

இந்த மாதம் உறவினர்கள் மூலம் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் மனைவி உறவுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணியிடத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆரோக்கியம்  சீராக இருந்தாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், ஆதலால் கவனம் தேவை.

மீனம் ராசி மாத பலன்:

மீனம் ராசி மாத பலன்இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவு நன்றாக இருந்தாலும் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில்  பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எடுப்பதற்கு இந்த மாதம் உகந்தது. வெளிநாட்டு பயணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்