மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

Meenam Guru Peyarchi 2021 to 2022 in Tamil

Meenam Guru Peyarchi 2021 to 2022 in Tamil

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம் குழுவின் அன்பான வணக்கம்.. மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வமா.. அப்படினா இந்த பதிவு உங்களுக்கானது தான், இந்த குரு பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு சக்தி வாய்ந்த குருபெயர்ச்சி என்று சொல்லலாம். உங்கள் வாழ்க்கையில் பலவகையான மாற்றங்கள் நிகழ இருக்கிறது. மற்ற பெயர்ச்சியில் போல் இல்லாமல் இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். சரி வாங்க மீனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் எந்தமாதிரியான பலன்களை வழங்க போகிறார் என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

பொது பலன்கள்:

இது வரை தங்கள் ராசியில் 11-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான். இந்த பெயர்ச்சியின் போது 12-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். மீன ராசிக்காரர்களு 12-ம் இடம் என்பது விரைய ஸ்தானமாகும். ஆகவே 12-ம் இடம் மீனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு இல்லைதான். எனவே மீனம் ராசிக்காரர்கள் விரையம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் திசைக்கு தான் அதிக நற்பலன்களை வழங்குவார் என்பதினால், உங்கள் ராசிக்கு குரு பகவான் 4-ம் இடத்தை பார்வையிடுகிறார். மீனத்திற்கு 4-ம் இடம் என்பது சுகஸ்தானம் ஆகும். ஆகவே சுகம் சார்ந்த விஷயங்களில் குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குவார். அதாவது கடந்த காலத்தில் தங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள், மன அழுத்தங்கள், மன குழப்பங்கள் போன்ற பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். இருப்பினும் நீங்கள் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் வழக்கு சார்ந்த விஷயங்களில் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குடும்பம்:

உங்கள் குடும்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் தனவரவு சிறப்பாக இருக்கும். உங்கள் வீடு பொருளாதார நிதிநிலை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மேலும் உங்கள் முயற்சிக்கான நல்ல பலன்களை இந்த பெயர்ச்சியின் போது பெறுவீர்கள். உங்களிடம் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மேலும் உங்கள் சகோதரர்களால் உங்களுக்கும், உங்களால் உங்கள் சகோதரர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனைகளும் வராமல் இந்த காலகட்டத்தில் பார்த்துக்கொள்வது நல்லது. தாய், தாய்வழி உறவினர்களினால் இருந்து வந்த மனக்கசப்புகள் அனைத்தும் இந்த பெயர்ச்சினால் நீங்கும். உங்கள் தாயின் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் இப்பொழுது சீராகும்.

பொருளாதாரம்:

மீனம் ராசிக்காரர்கள் வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதிநிலை உயரும் என்பதினால் சுபகாரியங்களுக்கு அதிகளவு செலவு செய்வீர்கள். உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் இந்த சமயத்தில் தீரும். உங்களது கடன் சுமை குறையக்கூடிய காலகட்டம் இது.

வேலை:

வேலை சார்ந்த விஷயங்களில் ஒருசிலருக்கு ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த பணியிட மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியானதாகவே இருக்கும். மேலும் பணியிடச் சூழலும் தங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். அலுவகத்தில் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

கல்வி:

கல்வி கற்கும் மீன ராசி மாணவ செல்வங்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் உங்களது கனவுகள், திட்டங்கள், முயற்சிகள் அனைத்திற்கும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

திருமணம்:

மீனம் ராசி அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பொறுத்தவரை திருமணம் சார்த்த விஷயங்களில் மட்டும் சில தடைகள் ஏற்படும். இருப்பினும் இந்த தடைகள் வெறும் 5 மாதங்களுக்கு மட்டும் தான். 2022 ஏப்ரல் மாதம் மீண்டும் ஒரு குருப்பெயச்சி நிகழ இருக்கிறது என்பதால் அதன் பிறகு உங்களுக்கு திருமணம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஆகவே இந்த 5 மாதங்கள் மட்டும் திருமணம் சார்ந்த விஷயங்களில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் கணவன் மனைவி உறவுக்குள் சிலவகையான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆகவே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

வியாபாரம்:

வரவு செலவில் கவனம் தேவை. புதியவர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டாம். அதேபோன்று பொருள்கள் கொள்முதலிலும் அக்கறை தேவை. சந்தையில் தேவை உள்ள பொருள்களை அறிந்து கொள்முதல் செய்யுங்கள். தள்ளுபடி சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்பீர்கள். பணியாளர்களால் சில பிரச்சனைகள் வந்து போகும். கடையைப் பெரிதுபடுத்த முயல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது அவசியம். பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள்.

பரிகாரம்:

தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

இதையும் படியுங்கள்–> குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்