சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது நல்ல சகுனமா?

Advertisement

முடி உணர்த்தும் சகுனம் | Sagunam

காலம் மாறிக்கொண்டே வந்தாலும் கூட இன்னும் பலர் சகுனம் பார்க்கும் பழக்கத்தை விடவில்லை. வெளியே போகும் போது பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனமாக கருதி வெளியே செல்லாமல் நின்றுவிடுவார்கள். இல்லை என்றால் மூன்று முறை தன்னை தானே சுற்றி கொண்டு பிறகு செல்வார்கள். அதேபோல் ஏதாவது நல்ல காரியத்திற்கு செல்லும் போது தெருவில் உள்ளவர்கள் எதிரே வந்துவிட்டால் செல்வதை நிறுத்திவிட்டு திருப்ப வீட்டிற்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு பிறகு அந்த நல்ல காரியத்திற்கு செல்வார்கள். இது போன்று பலர் பலவகையான சகுனத்தை இன்றளவும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் சகுனம் என்ன என்றால் நாம் சாப்பிடும் போது வாயில் முடி அகப்பட்டால் அது அபசகுனமாக கருதுகின்றன. உண்மையில் சாப்பிடும் போது முடி அகப்படுவது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா என்று இன்றைய பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது நல்ல சகுனமா?

முடி உணர்த்தும் சகுனம் 

சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும். ஆக இதற்கு பரிகாரமும் உள்ளது அது என்னவென்றால் ஒரு நெல்லை சாப்பிட்டுவிட்டால் பிறகு உங்களுக்கு எந்த ஒரு கவலையும் வராது. அப்படி ஏற்பட்டாலும் அவற்றில் சிக்கல் இருக்காது.

இருந்தாலும் பலர் சாப்பிடும் போது வாயில் முடி அகப்பட்டால் அதனை எப்படி சொல்வார்கள் என்றால். அந்த வீட்டில் உள்ளவர்களும், அவர்களுக்கும் உள்ள பந்தம் நிலைத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நாம் நல்லது என்று நினைத்தால் அது நல்ல சகுனம், கெட்டது என்று நினைத்தால் அது கெட்ட சகுனம் அவ்ளோதான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தும்மல் சகுனம் ஆண் மற்றும் பெண் தும்மினால் என்ன பலன்?

எவ்வாறு சாப்பிடக்கூடாது?

ஈரமான துணியுடன் உணவு உட்கொள்ள கூடாது. துண்டுடன் சாப்பிடக்கூடாது. மேலும் சந்திரனின் நிழலிலும், கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும், தெருக்கதவின் நடுத்திசையிலும், பிரதோஷகாலத்திலும், இருட்டிலும், திறந்த மொட்டை மாடியிலும் நீங்கள் சாப்பிடுவதாக இருந்தால் இன்றுடன் அந்த பழக்கத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் சாப்பிட்டால் அவ்வளவும் தரித்திரம் என்று சாத்திரம் சொல்லப்படுகிறது.

ஆனால் பௌர்ணமி அன்று நீங்கள் மட்டும் தனியாக சாப்பிடாமல், பலருடன் கூட்டாக அமர்ந்து சாப்பிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement