வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முருக பெருமானுக்கு உகந்த நாள் எதுன்னு தெரியுமா..?

Updated On: June 1, 2026 5:16 PM
Follow Us:
Muruganukku Uganda Naal in Tamil
---Advertisement---
Advertisement

Muruganukku Uganda Naal in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக இன்றைய காலகட்டம் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறியிருந்தாலும், இன்றைக்கும் ஆன்மீகத்தில் அதீத பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதுபோல நாம் அனைவருமே கோவில்களுக்கு சென்றிருப்போம். நம் இந்து சமயத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு கோவில்கள் இருக்கின்றன. அதிலும் நம் தமிழ்நாட்டில் 38,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கிறது. அப்படி இருக்கையில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு நாள் உகந்த நாளாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்தறியவும்.

கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?

முருகனுக்கு உகந்த நாள்: 

முருகனுக்கு உகந்த நாள்

பொதுவாக இந்து சமய கடவுள்களில் தமிழ் கடவுளாக இருப்பவர் தான் முருக பெருமான். நம் நாட்டில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும், உள்ள மக்கள் வணங்கும் கடவுளாக இருக்கிறார். முருகப் பெருமானுக்கு இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை.

அப்படி இருக்கையில் நாம் அனைவருமே முருகன் கோவிலுக்கு செல்வோம். ஆனால், முருகனுக்கு உகந்த நாள் எது என்று சரியாக தெரியாது. அதனால் முருகனுக்கு உகந்த நாள் எது என்று இந்த பதிவை படித்தறியலாம்.

அதற்கு முன் முருக பெருமானுக்கு விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

முருகனுக்கு நீங்கள் விரதம் இருப்பீர்களா.! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

 முருக பெருமானை வணங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபடலாம். 

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை முருக பெருமானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

முருகனுக்கு உகந்த நட்சத்திரம்:

முருக பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள் மூன்று இருக்கின்றன. அவை, விசாகம், கார்த்திகை, உத்திரம் என்பன ஆகும். இவை வைகாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் முழுநிலவு நாளை ஒட்டியே வரும். எனவே இந்த மூன்று நாட்களுமே முருகனை வழிபட உகந்த திருநாள்களாக இருக்கிறது.

முருகனுக்கு உகந்த மலர்:

முருக பெருமானுக்கு வாசனை உள்ள அனைத்து பூக்களையும் சாற்றலாம். மேலும் முருகனுக்கு உகந்த பூக்களாக மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி பூ  போன்ற பூக்கள் இருக்கின்றன.

முருகனுக்கு உகந்த நிறம்: 

பொதுவாக முருக பெருமானுக்கு அர்ச்சனை செய்யும் போது சிவப்பு நிறத்தில் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் கொண்டு தான் பூஜை செய்யப்படுகிறது. எனவே முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு நிறமாக பார்க்கப்படுகிறது.

முருகனுக்கு உகந்த பிரசாதம்: 

முருக பெருமானை வணங்குபவர்கள், அவருக்கு பிடித்த உணவுகளை பிரசாதமாக படைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அழகன் முருகனுக்கு வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, தினை மாவு, பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவை உகந்த பிரசாதமாக இருக்கிறது.

இழந்ததை மீட்டுத்தரும் முருகன் விரதம்:

வெள்ளி கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் நீங்கள் இழந்தது உங்களுக்கு வந்து சேரும். இழந்த பதவி, இழந்த உறவு போன்றவை உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். வெள்ளி கிழமை அன்று ஒரு வேலை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கும் முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்  
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now