முருகன் தமிழ் பக்தி பாடல்கள்
நாம் வணங்கும் கடவுளை பொறுத்தவரை சிவன், முருகன், விநாயகர், பெருமாள், அம்மன் மற்றும் ஆஞ்சேநேயர் என இத்தகைய வகையில் எண்ணற்றவர்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அந்த வகையில் பார்த்தால் நாம் ஒரே நேரத்தில் அனைத்து கடவுளையும் வணங்குவது இல்லை. ஒவ்வொரு நாள் அல்லது கிழமை என இத்தகைய முறையில் தான் கடவுள்களை எல்லாம் வணங்கி வருகிறோம். அப்படி பார்க்கையில் பெரும்பாலும் கார்த்திகை அன்றும், திதி, சஷ்டி மற்றும் திங்கள், செவ்வாய் என இத்தகைய நாட்களிலும் முருகனை வணங்கலாம். இவ்வாறு கடவுளை வாங்குவதில் மட்டும் நேரம் மற்றும் நாள் என இத்தகைய முறையினை நாம் பார்த்தாலும் கூட அத்தகைய கடவுளுக்கு உரிய பாடல்கள் எது என்பது பலருக்கும் தெரியமலே இருக்கிறது. ஆகவே இன்று முருகனுக்கு உரிய பக்தி பாடலான திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் பாடல் வரிகளை பார்க்கலாம் வாங்க..!
காரிய சித்தி மாலை பாடல் வரிகள் |
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல் வரிகள்:
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இசை சரணம் – 2
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இருவர் திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |