அழகான பழனிமலை ஆண்டவா பாடல் வரிகள்..!

Advertisement

முருகன் பக்தி பாடல்

ஆன்மீக நண்பர்கள் அணைவருக்கும் வணக்கம்..! கடவுகளில் முருக பெருமான் கடவுளும் ஒருவர். இவர் சிவபெருமானின் பிள்ளை ஆவர். அந்த வகையில் முருகனுக்கு வள்ளி, தெய்வானை என இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் முருகனுக்கு ஒரு வீடு மட்டுமின்றி 6 வீடுகள் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் முருகனின் ஆறுபடை வீடு எந்தெந்த ஊரில் இருக்கிறது என்றால் திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், பழனி மற்றும் திருத்தணி ஆகியவை ஆகும்.

அப்படி பார்க்கையில் ஒவ்வொரு கார்த்திகை அன்றும் முருகப்பெருமானின் தரிசனத்தை பெறுவதற்காக மக்கள் கோவில்களுக்கு வருகிறார்கள். மேலும் இந்த அறுபடை வீடுகளில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஊரில் இருக்கிறது. அதன் படி பார்த்தால் திருப்பரங்குன்றத்தில் முருகன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக கூறப்படுகிறது. எனவே இவ்வளவு தூரம் முருகனின் சிறப்பு பற்றி தெரிந்துக்கொண்டோம், அடுத்த முருகனுக்கு உரிய பக்தி பாடலை பார்க்கலாம் வாங்க..!

முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்.

அழகான பழனிமலை ஆண்டவா பாடல்:

 முருகன் பக்தி பாடல்

அழகான பழநி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா முருகா முருகா முருகா

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியெனும் உனை பாட அருள்வாய் அய்யா
எளியெனும் உனை பாட அருள்வாய் அய்யா

முருகா முருகா முருகா முருகா

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்

உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா

முருகா முருகா முருகா முருகா..!

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement