முருக பெருமானை வழிபடும் முறை
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் என்ன தான் நவீன தொழில்நுட்பத்தால் வளர்ந்து கொண்டே இருந்தாலும் இன்றும் ஆன்மீகத்தில் அதீத பக்தி கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். மேலும் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் கூட அதை சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை வர காரணம் இறைவழிபாடு தான். அதுபோல நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் ஆன்மிகம் பதிவில் தமிழ் கடவுள் முருக பெருமானை எப்படி மனதார வழிபட வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்..!
முருகனுக்கு நீங்கள் விரதம் இருப்பீர்களா.. அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்
முருக பெருமானை எப்படி வழிபட வேண்டும்..?
பொதுவாக நம் அனைவருக்குமே ஒரு கடவுளின் மீது அதீத பற்று இருக்கும். அப்படி இருக்கும் கடவுள்களில் ஒருவர் தான் முருக பெருமான். முருக பெருமானை வழிபடாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படி புகழ் பெற்ற முருக பெருமானை நாம் எப்படி வழிபட வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
முருகனுக்கு உகந்த நாள் எது:
முருக பெருமானுக்கு உகந்த நாளாக செவ்வாய் கிழமை பார்க்கப்படுகிறது. அதனால் நாம் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் முருகனுக்கு விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் செவ்வாய்க் கிழமை தான். முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்தால், வருமானம் அதிகரிக்கவும், குடும்பம் அமைதி பெறும், மன நிம்மதி கிடைக்கும்.
முருகனுக்கு உகந்த பூ எது:
முருகனுக்கு உகந்த மலராக இருப்பது தான் கடம்ப மலர் மற்றும் செண்பக மலர். இவை இல்லாமல் வாசனை நிறைந்த மற்ற மலர்களையும் முருகனுக்கு சாற்றலாம். அதுமட்டுமில்லாமல் முருகருக்கு அரளிப்பூ அல்லது முல்லை பூ வாங்கி சூட்டுவது மிகவும் நல்ல பலன்களை தருகிறது.
அட இந்த கோவிலை இத்தனை முறை தான் சுற்ற வேண்டுமா
முருகன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும்:
முருகப் பெருமானின் கோவிலை 6 முறை சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வந்தால் எதிரிகளை வெல்ல கூடிய திறமையும், சிறந்த ஆற்றலும், செல்வவளமும் கிடைக்கும்.
முருகனை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரம்:
முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றிய பின்பு, முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து மனதார பதினோரு முறை ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களும் தடைகளும் நீங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |