கடன் தீர எளிமையான பரிகாரம் 11 வாரம் செய்தால் போதும்..

Advertisement

கடன் தீர எளிமையான பரிகாரம் 

எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது பணம் சம்பாதிக்கத்தான். ஆனால், சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய் விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பல முறைகளில் கடனை வாங்கி இருக்கலாம். பொருளாக வாங்கிய கடன், வீட்டுக் கடன், வாகனங்கள் வாங்கிய கடன் இவையெல்லாம் கூட கடன்தான். இப்படி எந்த வகையான கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி எடுத்தாலும் அதற்கு ஏதவாது செலவு வந்து விடுகிறது என்று நினைத்தால் அதற்கு ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

 பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

இந்த பரிகாரத்தை செய்வதற்கு எளிமையான பொருள் தான் தேவைப்படுகிறது. அதுவும் எல்லார்  வீட்டிலும் இந்த பொருள் இருக்கும். மொச்ச கொட்டையும், வெல்லமும் தேவைப்படும்.

பரிகாரம்செய்வது எப்படி.?

 மொச்சை பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நீங்கள் சூரிய உதயத்திற்கு முன் எந்திரிக்க வேண்டும். ஏனென்றால் சூரிய உதயத்திற்கு முன்பு நம் எந்திரித்து எந்த விஷயம் செய்தாலும் அவை நல்லபடியாக நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் நீங்கள் 6 மணிக்கு முன் எந்திரிக்க வேண்டும். எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.

பெருமாள் கோவிலில் உட்கார கூடாது, சிவன் கோவிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்?

பிறகு பூஜை அறையில் அமர்ந்து கையில் மொச்சக்கொட்டையையும், வெல்லத்தையும் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் மனதார உங்களின் கடன் அடைய வேண்டும் என்று உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து வேண்டி கொள்ளலாம். ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

27 முறை சொல்லி முடித்த பிறகு நீங்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் போட்டு விட வேண்டும். இதில் சேர்த்திருக்கும் மொச்ச கொட்டை ஆனது ஊறியதும், மாட்டிற்கு அல்லது குருவிகளிடம் வைத்து விட வேண்டும். இவை இரண்டுமே செய்யா முடியாவிட்டால் மனித காலடி படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

எததனை நாள் செய்ய வேண்டும்:

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும், தொடர்ந்து 11 வாரங்களுக்கு செய்ய வேண்டும். இது போல நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கடன் பிரச்சனை நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement