ராகு காலம் என்றால் என்ன? | Rahu Kalam in Tamil

Advertisement

ராகு காலம் எம கண்டம் | Rahu Kalam

நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டு தான் சுபகாரியங்களை தொடங்குவோம். புனித தினமாக கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன, ராகு காலத்தில் என்ன செய்யலாம் மற்றும் ராகு காலம், எமகண்டம் வரக்கூடிய தினங்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ராகு காலம் எமகண்டம்

ராகு காலம் என்றால் என்ன?

  • ராகு காலம் என்பது ஆன்மிகத்தின் படி ஒரு கெட்ட காலமாக அல்லது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைப்படுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள்.
  • ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு காலத்தில் புதிய முயற்சிகள், திருமண பேச்சு வார்த்தை, வீடு குடி போவது, திருமணம், தொழில், புதிய வேலை போன்ற சுபகாரியங்களை செய்வதில்லை.
  • ராகுவால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த காலம் ராகுவுக்கு சொந்தமான காலம் ஆகும். இந்த காலம் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

எமகண்டம் என்றால் என்ன?

  • எமகண்டம் இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது.
  • இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது.

எமகண்டம், ராகு காலத்தில் என்ன செய்யலாம்?

  • ராகு காலம், எமகண்டத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்ய கூடாது.
  • ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகு, கேது பூஜை செய்யலாம். இந்த பூஜையின் மூலம் திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை விலகும்.
ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement