வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடி பலன்களை அள்ளித்தரும் ராம நாம மந்திரம்..!

Updated On: April 3, 2024 7:21 PM
Follow Us:
Rama Nama Mantra in Tamil
---Advertisement---
Advertisement

Rama Nama Mantra in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் பல கோடி நன்மைகளை அள்ளித்தரும் ராம நாம மந்திரத்தை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மந்திரம் என்பது கண்டிப்பாக இருக்கும். நாமும் நமக்கு பிடித்த கடவுளை நினைத்து, அந்த கடவுளுக்கு உகந்த நாளில் அந்த மந்திரத்தை சொல்லி கடவுளை வழிபடுவோம்.

அப்படி கடவுளுக்கான மந்திரத்தை கூறி வழிபடுவதால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், இன்று நாம் இந்த பதிவின் மூலம் ராம நாம மந்திரத்தை தெரிந்து கொண்டு அந்த மந்திரத்தை ராமரை வணங்கும் போது சொல்லி வழிபடலாம். சரி வாங்க நண்பர்களே ராம நாம மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீ ராமரின் அஷ்டோத்திர வரிகள்

ராம நாம மந்திரம்:

பொதுவாக ராம மந்திரம் உலகின் மிக சக்தி வாய்ந்த மந்திரமாக பார்க்கப்படுகிறது. எந்த கஷ்டமான சூழலிலும் நமக்கு நன்மையையும், வெற்றியையும் தரக் கூடியதாக ராம மந்திரம் இருக்கிறது.

மேலும் பகவான் ஸ்ரீ ராமரின் ராம ரக்ஷஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ள மந்திரமானது  மிகவும் அற்புதமானது. இந்த மந்திரம் பிரபஞ்சம் முழுவதையும் ஆள முடியும் என்பதற்கு பகவான் ஸ்ரீ ராமரின் ராம் என்ற வார்த்தை மட்டுமே போதும் என்றே சொல்லலாம். எனவே இந்த மந்திரம் ஒரு பெரிய மந்திரமாகும்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே..!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே..!

தர்ப்பண மந்திரம்:

பொதுவாக மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது பிராமணர்கள் அனைத்து அருளையும் தரக் கூடிய சத்ரிய மன்னன் ராமனின் பெயரை குறிப்பிடுகின்றனர். அந்த மந்திரத்தை கீழே காண்போம்.

ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம!

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை

ராம மூல மந்திரம்:

ஸ்ரீ ராம ஜெயம்
ஜெய் ஸ்ரீ ராம்

இஸ்கான் கோயிலில் சொல்லப்படும் மந்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே!

ராமனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதஸே ரகுநாதாய நாதாய சீதாய பதயே நமஹ!

கோதண்ட ராம மந்திரம்:

ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராமா!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now