வசியப் பொருத்தம் | Vasiya Porutham
Vasiya Porutham in Tamil: திருமணம் என்ற பேச்சு வந்தாலே முதலில் பார்ப்பது பொருத்தம் தான். யோனி பொருத்தம், கன பொருத்தம், மகேந்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், தின பொருத்தம், வேதைப் பொருத்தம், வசிய பொருத்தம் என பொருத்தங்கள் பல உள்ளன. இந்த பொருத்தங்களில் ஒன்றான வசிய பொருத்தம் என்றால் என்ன? மற்றும் இந்த பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
திருமணத்தில் வசிய பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஆனால், நம்மில் பலருக்கும் வசிய பொருத்தம் என்றால் என்ன என்பதே தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் வசிய பொருத்தம் என்றால் என்ன.? வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
வசியப் பொருத்தம் என்றால் என்ன? | Vasiya Porutham Meaning in Tamil
- திருமணத்திற்கு பார்க்கப்படும் பொருத்தங்கள் மொத்தம் 10 உள்ளது, அதில் 8-வது பொருத்தமாக இந்த வசிய பொருத்தம் அமைந்துள்ளது.
- கணவன் மனைவி உறவுக்குள் அன்பு, மகிழ்ச்சி எந்த அளவில் இருக்கும் என்பதற்காக இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. வசிய பொருத்தம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள ஈர்ப்பைக் குறிக்கும்.
வசியப் பொருத்தம் விளக்கம்:
- கணவன் மனைவி உறவுக்குள் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் அன்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வசிய பொருத்தம் மிகவும் முக்கியம்.
- வசியப் பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். வசிய பொருத்தம் அந்தந்த இராசிகளின் குணத்திற்கு பிற இராசிகளின் குணம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்க்கப்படுகிறது.
- உதாரணத்திற்கு மேஷ ராசியின் குணம் புதிய செயல்களை மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்தவர்களாக இருந்து, சிம்ம ராசியின் குணம் புதிய செயலை செய்வதை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருந்தால் மேஷத்திற்கும், சிம்ம ராசிக்கும் உள்ள குணங்கள் ஒத்துப்போவதாக இருக்கும்.
வசிய பொருத்தம்:
ராசிகள் |
வசிய பொருத்தம் உள்ள ராசிகள் |
மேஷம் |
சிம்மம், விருச்சிகம் |
ரிஷபம் |
கடகம், துலாம் |
மிதுனம் |
கன்னி |
கடகம் |
விருச்சிகம், தனுசு |
சிம்மம் |
மகரம் |
கன்னி |
ரிஷபம், மீனம் |
துலாம் |
மகரம் |
விருச்சிகம் |
கடகம், கன்னி |
தனுசு |
மீனம் |
மகரம் |
கும்பம் |
கும்பம் |
மீனம் |
மீனம் |
மகரம் |
வசிய பொருத்தம்:
- Vasiya Porutham in Tamil: பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக இருந்தால் உத்தமம் என்றும், ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக இருந்தால் மத்திம பொருத்தமாக கருதப்படுகிறது.
- உதாரணத்திற்கு பெண் ராசி மேஷமாக இருந்து ஆண் ராசி சிம்மம் அல்லது விருச்சிகமாக இருந்தால் அது உத்தமம் ஆகும். இது 100% பொருத்தமாக இருக்கும்.
- ஆணின் ராசி மேஷமாக இருந்து பெண்ணுடைய ராசி சிம்மம் அல்லது விருச்சிகமாக இருந்தால் அது மத்திம பொருத்தம் ஆகும். இது 50% பொருத்தமாக இருக்கும்.
வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
- Vasiya Porutham is Important or Not in Tamil: பொதுவாக பெண் ராசியை வைத்தே வசிய பொருத்தம் பார்க்கப்படுகிறது. பத்து பொருத்தங்களில் மற்ற எல்லா பொருத்தங்களும் இருந்து வசிய பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |