வரலட்சுமி விரத பூஜை முறைகள் | Varalakshmi Vratham Procedure in Tamil

வரலட்சுமி விரதம் பூஜை | Varalakshmi Vratam in Tamil

நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய நாம் பல செயல்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் இறை வழிபாடு. இல்லற வாழ்க்கை சிறப்பாகவும், எந்த பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதற்கும் நாம் பல்வேறு பூஜைகளை செய்து வருகிறோம். பூஜைகளில் மகாலட்சுமி பூஜை, வைபவ லட்சுமி பூஜை, வரலட்சுமி பூஜை போன்ற பல பூஜைகள் உள்ளது. நாம் இந்த தொகுப்பில் வரலட்சுமி பூஜை விரதம் எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

வரலட்சுமி விரதம் 2022 | Varalakshmi Vratham Tamil:

இந்த விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் 12.08.2022 அன்று வருகிறது.

விரதத்திற்கான பொருட்கள்:

Varalakshmi Vratam: வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், கலசம், நெல், பச்சரிசி, எழுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழை இலை, பூ, உதிரிப்பூக்கள், அட்சதை, நோன்பு கயிறு, துளசி இலைகள், கற்கண்டு, பச்சை கற்பூரம், பழ வகைகள் தேவை.

நெய்வேத்தியம்:

இந்த பூஜைக்கு சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, அப்பம், லட்டு, பசும்பால், தயிர், பாயாசம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்யலாம். இந்த உணவுப்பொருட்களை நீங்கள் சுவை பார்க்க கூடாது.

வரலட்சுமி விரதம் எப்படி இருக்க வேண்டும்?

Varalakshmi Vratam

 • Varalakshmi Vratam: இந்த பூஜை செய்வதற்கு உங்கள் வீட்டில் ஈசானி மூலையில் கிழக்கு திசையில் ஒரு மண்டபம் அல்லது பலகை அமைத்து கொள்ளுங்கள். பலகை அல்லது மண்டபத்தில் கோலம் போட்டு கொள்ளவும். பின் அதில் வாழை இலையை போட்டு அதன் மேல் நெல் அல்லது பச்சரிசியை சேர்த்து பரப்பி கொள்ளுங்கள்.
 • பின்னர் அதன் மேல் கலசத்தை வைத்து கலசத்தில் தண்ணீர் ஊற்றி கற்பூரம் மற்றும் துளசி சேர்த்து தீர்த்தமாக செய்து கொள்ளுங்கள். அதில் காசு, உங்களிடம் இருக்கும் தங்கம் அல்லது வெள்ளி நகையை போட்டு கொள்ளுங்கள். கலசத்தின் நான்கு புறத்திலும் மஞ்சள், குங்குமம் இட்டு கொள்ளுங்கள்.
 • கலசத்தின் மேல் மாவிலை மற்றும் தேங்காயை வைத்து கொள்ளுங்கள். தேங்காயில் மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைத்து கொள்ளுங்கள். இந்த தேங்காயின் மேல் அம்பாள் முகம் வைக்கலாம். அம்பாள் முகம் இல்லாதவர்கள் தேங்காயை அம்பாளாக நினைத்து வேண்டி கொள்ளலாம்.
வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள்

வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

வரலட்சுமி விரதம் பூஜை

 • Varalakshmi Vratham Tamil: பின்னர் ஒரு வெள்ளை நூல்கண்டு எடுத்து அதை நறுக்கி அதில் மஞ்சள் குங்குமம் தடவி ஒன்பது முடிச்சு போட்டு கொள்ளுங்கள். வீட்டில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை நோன்பு கயிறு தயார் செய்து கொள்ளுங்கள். இது அஷ்டலட்சுமிகளையும் ஒன்றாக இணைத்து கட்டிக்கொள்ள இருக்கும் நோன்பு கயிறு ஆகும்.
 • இந்த கயிறை திருமணம் ஆன பெண்கள் கழுத்திலும், திருமணம் ஆகாத பெண்கள் வலது கையில் கட்டி கொள்ளுங்கள். இந்த பூஜையை நீங்கள் நல்ல நேரம் பார்த்துவிட்டு செய்ய ஆரம்பியுங்கள்.

வரலட்சுமி விரதம் பூஜை:

Varalakshmi Vratham Tamil

 • Varalakshmi Vratham Tamil: பூஜை ஆரம்பிக்கும் பொழுது முதலில் மஞ்சளை பிடித்து பிள்ளையார் பிடிக்க வேண்டும். பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ சாற்றி ஓம் கம் கணபதயே நம இந்த மந்திரத்தை 3 முறை முதலில் உச்சரிக்க வேண்டும்.
 • அதன்பின் உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள் அதனை உச்சரித்து விட்டு இருபுறமும் இரண்டு குத்து விளக்குகளை ஏற்றி வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். நெய்வேத்தியம் படைத்து, தூப தீபம் காண்பித்து, அட்சதை தூவி, உதிரிப் பூக்களை போட்டுக் கொண்டே ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம் உச்சரிக்க வேண்டும்.
 • பூஜை முடிந்த பிறகு கலசத்தை மூன்றாவது ஞாயிறு அன்று கலைத்து விடலாம். கலசத்தில் இருக்கும் தண்ணீரை செடிக்கு ஊற்றி விடுங்கள், நோன்பு கயிறை உங்கள் கணவரிடம் கொடுத்து கட்டி கொள்ளுங்கள்.

வரலட்சுமி விரதம் பலன்கள்:

 • Simple Varalakshmi Pooja at Home in Tamil: இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும், செல்வம் பெருகும்.
 • திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
 • சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்