வாழ்நாள் ஜாதகம் பலன்கள் உங்கள் ராசி எப்படி இருக்கும்?

valnal jathagam

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்?

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் நமது வாழ்நாள் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ள பொதுவாக ஆர்வமாக இருப்போம். அதாவது நமது குணம், குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை, தொழில் இது போன்று நமது வாழ்க்கை ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் இந்த பதிவில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்? என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்நாள் ஜாதகம் மேஷம்:

மேஷம் ராசிக்காரரின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்.

குணம்:

மேஷம் ராசிக்காரர்கள் எப்பொழுது தன்னம்பிக்கை யுடையவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி தன்னால் செய்ய முடியும் என்று எண்ணம் கொண்டவர் நீங்கள் தான். மேஷம் ராசியில் பிறந்த ஆண், பெண் இருவருக்குமே வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கும். தங்கள் உறவுகளுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் மற்றவர்களுக்காக உங்கள் உறவை விட்டு கொடுக்க மாட்டிர்கள். ரொம்ப பாசமாக இருப்பீர்கள். நண்பர்களிடமும், தாய், தந்தையிடமும் அதிக பாசம் கொண்டிருப்பீர்கள். மேலும் சமுகத்தில் நல்ல மதிப்புடன் வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். இருப்பினும் உங்களுக்கு முன் கோபம், ஈகோ போன்றவை அதிகமாக இருக்கும்.

தொழில்:

தொழில் உத்தியோகம் பொறுத்தவரை முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு கீழ் பலர் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக நீங்கள் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

நோய்கள்:

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகலாம்.

எந்தெந்த துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்:

மேஷம் ராசிக்காரர்கள் பெறியியல், மருத்துவம், அரசியல், தேடல் தொடர்பான தொழில்கள் மிகவும் சிறந்து விளங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு திசை எப்பொழுதுமே அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதேபோல் நிறங்களில் சிவப்பு ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் மிகவும் அதிர்ஷ்டமானது.


வாழ்நாள் ஜாதகம் – ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரரின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்.

குணம்:

ரிஷபம் சுக்கிரனின் ராசியாகும். அழகு மற்றும் லவுகீக வாழ்க்கையை அதிகம் விரும்பக்கூடிய ராசி தான் இந்த ரிஷபம் ராசி. அதாவது தன்னை அழகுபடுத்தி கொள்வது, அழகான விஷயங்களை அதிகம் விரும்புவது போன்ற குணங்கள் ரிஷபத்திற்கு உண்டு. அதேபோல் உங்களிடம் அதிக கற்பனை நின்றான் நிறைந்து காணப்படும். குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியா நபர் என்றாலும் யாராவது உங்களை தூண்டிவிட்டால் போதும் உங்களிடம் வேகம் அதிகமாகிவிடும். அதுக்கு அப்பறம் உங்களை கண்ரோல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்களை நீங்களே கண்ரோல் செய்துகொண்டால் தான் உண்டு. மேலும் நீங்கள் அதிக அன்பை எதிர்பார்க்கும் நபர் என்றும் சொல்லலாம். உங்களிடம் யாராவது அக்கறையாக இருந்தால் அவர்களை அதிகம் விரும்புவிடுவீர்கள். மேலும் மேல்தட்டு மக்களை போலவே வாழ நினைப்பீர்கள். அதாவது பத்துபேருக்கு நடுவில் நீங்கள் தான் உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மிகவும் ருசிக்க சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள்.

திருமண வாழ்க்கை:

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று வைத்து கொள்வோம் பணம், பொருள், வீடு, சம்பாத்தியம் போன்ற வசதிகளை அதிகரித்து கொண்டே செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் துணையிடம் அதிகம் அன்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். இவர்களது பொதுவான குடுமப வாழ்க்கையில் எந்த ஒரு இருக்காது. இருப்பினும் நீங்கள் எதிர்மறையான எண்ணம் கொண்டவரை திருமணம் செய்து கொண்டால் சில மனம் கசப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும் இதனை நீங்கள் பொறுத்துக்கொண்டு சென்றுவிடுவீர்கள்.

எந்தெந்த துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்:

சினிமா, என்டேர்டைன்மெண்ட், ஆடுவது, பாடுவது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள்.

தொழில்:

நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் என்று வைத்துக்கொள்வோம், உங்களை எப்பொழுது வழிநடாத்துவதற்கு அதாவது நீங்கள் செய்யும் செயலை சரி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒரு ஆள் இருக்க வேண்டும். எந்த விஷயங்களை செய்வதாக இருந்தாலும் மற்றவர்களிடம் ஆலோசை பெற்று தான் நீங்கள் அந்த செயலை செய்வீர்கள்.

நோய்:

எப்பொழுதுமே ஏதோ நோய் உள்ளவர் போலவே காணப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு கடைசி வரை எந்த ஓரு நோயும் வராது.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

தெற்கு திசையை நோக்கி பயணம் செய்யும் பொழுது நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் நீங்கள் மேலிருந்த நிறங்களை அதிகம் விரும்புவீர்கள்.


வாழ்நாள் ஜாதகம் – மிதுனம்:

மிதுனம் ராசிக்காரரின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்.

குணம்:

உங்களுக்கு நேர்மைறையான எண்ணங்களும் தொன்று, அதேபோல் எதிர்மறையான எண்ணங்களும் தோன்றும். ஏதாவது ஐடியாக்கள் உங்களுக்குள் தோன்றிக்கொண்டே இருக்கும். மிதுனம் ராசிக்காரர்கள் சிறு வயதில் இருந்தே மற்றவர்களுக்கு நிறைய அட்வைஸ் தருவார்கள் ஆனால் அவற்றை நீங்கள் பின்பற்ற மாட்டிர்கள். மேலும் சமயத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றி கொள்வீர்கள். வணிகம் செய்யும் தொழிலை நீங்கள் செய்தால் அவற்றில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அதாவது பேசியே ஆளை மயக்கிவிடுவீர்கள். அதேபோல் மற்றவர்கள் எப்படி சமாளிக்கலாம் என்ற திறன் உங்களிடம் இருக்கும்.

திருமண வாழ்க்கை:

மிதுனம் ராசிக்காரர்கள் உங்கள் துணையிடம் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பீர்கள். இருவருக்கிடையில் நல்ல புரிதலும், அன்பும் அதிகமாகவே இருக்கும் ஆனால் உங்கள் துணையம் சொல்பேச்சை கேக்கவே மாட்டிர்கள். இதனால் சில வாக்குவாதம் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

எந்தெந்த துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்:

விற்பனை தொழில், ஆசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், செய்தி தொகுப்பாளர், மருத்துவம் போன்று பல துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

மேற்கு தொடை உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சிறந்த நிறங்கள் பச்சை, கிரேப், நீளம் இந்த மூன்று நிறங்களும் உங்களுக்கு மிகவும் சிறந்த நிறமாகும்.


வாழ்நாள் ஜாதகம் – கடகம்:

கடகம் ராசிக்காரர்களின் வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும் தெரியுமா?

குணம்:

கடகம் ராசிக்காரர்கள் மிகவும் சாந்தமானவர்கள் அதேபோல் உங்களிடம் கருணை, அன்பு, பொறுமை போன்ற குணங்கள் எல்லாம் உங்களிடம் எப்பொழுது காணப்படும். அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். இருப்பினும் இவர்கள் எல்லாரிடமும் நன்றாக பழகுபவர்கள் என்றாலும் அனைவரிடமும் அவர்களது முக்கியமான விஷயங்களை சொல்ல மாட்டார்கள் அவர்களுக்கு மிகவும் நேருமான உறவுகளிடம் மட்டுமே அவர்களது இன்பம், துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பாக கடகம் ராசியில் பிறந்த ஆண், பெண் இருவரும் பொதுவாக உணர்வுப்பூர்வமானவர்கள். கடல் கடந்து ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும்.

சிறந்து விளங்கும் துறைகள்:

கடகம் ராசியில் பிறந்தவர்கள் மருத்துவம், அரசியல், பூமி சம்மந்தப்பட்ட தொழில் செய்யக்கூடியவர்கள். நீர் சம்மந்தப்பட்ட தொழில் செய்யக்கூடியவர்கள்.

திருமண வாழ்க்கை:

பொதுவாக கடகம் ராசிக்காரர்கள் திருமணம் வாழ்க்கையிலும் சரி, காதல் வாழ்க்கையும் சரி நிறைய சொதப்பக்கூடியவர்கள். அதாவது காதல் திருமணம் ஆகிய இரண்டிலும் அதிக அவசரப்பட்டு எடுக்கும் முடிவின் பொழுது வாழ்க்கையை ஸ்பாயில் செய்துகொள்பவர்களும் உண்டு. ஆகவே நீங்கள் தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து சிக்கிக்கொள்ளாமல் இருக்க முடியும்.

தொழில்:

தொழில் பொறுத்தவரை இவர்களுக்கு எப்பொழுதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒருநாள் கை நிறைய சம்பாதிப்பீர்கள், அதே போல் ஒரு நாள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட கையில் காசு இருக்காது.

நோய்:

இயல்பாகம் கடகம் ராசிக்காரர்களுக்கு மனம் நலம் தொடர்பான பிரச்சனைகள் தான் அடிக்கடி வரும். இதற்கு காரணம் என்னவென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறாது இதன் காரணமாகவே இவர்களது மனதில் ஒரு வகையான அழுத்தம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஆகவே மனதை கட்டு படுத்தினால் நோயற்ற வாழ்க்கையை வாழ முடியும்.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு எப்பொழுதுமே வடக்கு தொடை அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிறங்களை பொறுத்தவரை மெளிர்ந்த நிறம் வெள்ளை, வெளிர்ந்த நீளம், ரோஸ் போன்ற நிறங்கள் மிகவும் சிறந்ததாக இருக்கும்.


வாழ்நாள் ஜாதகம் – சிம்மம்:

சிம்ம ராசிக்காரரின் வாழ்க்கை ஜோதகம் எப்படி இருக்கும்.

குணம்:

சிம்மம் ராசிக்காரர்கள் பொறுத்தவரை அதிக தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் ஆவார். இவர்களிடம் கோபம் அதிகம் நிறைந்து காணப்படும், கட்டளையிடும் தன்மை ஆகிய குணங்கள் நிர்நது காணப்படும். ஒரு செயலை செய்யும் பொழுது அவற்றில் சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். இவர்களிடம் இருக்கும் ஒரு அருமையான குணம் எதுவென்றால் அனைத்து விஷயங்களையும் நேராக பேசுவார்கள் இவர்களிடம் சுத்தி வளைத்து பேசும் தன்மை எப்பொழுதும் இருக்காது. அதேபோல் ஒரு விஷயத்தை அவசரப்பட்டு செய்யமாட்டார்கள். அப்படி செய்தார்கள் என்றால் அதனை ஒரு போது ஸ்டாப் செய்துவிட மாட்டார்கள் செய்து கொண்டே இருப்பார்கள். மிகவும் தைரியகானவர்கள். எதற்காகவும் அஞ்சமாட்டார்கள் குறிப்பாக இவர்களிடம் துணிவு அதிகமாக இருக்கும். அதேபோல் ஒரு விஷயத்தை யார் செய்தால் எளிதாக செய்ய முடியும், யார் மூலம் காரியத்தை தனக்கு சாதகமாக மாற்றி கொள்ள முடியும் போன்ற தீர்க்க எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டார்கள் ரொம்ப நாள் பழகிய பிறகு தன ஒருவரை நம்பவே ஆரம்பிப்பீர்கள்.

தொழில்:

அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க கூடியவர்கள். சிம்மத்தை பொறுத்தவரை தனக்கு கீழ் கட்டளையிடக்கூடிய இடத்தில் நீங்கள் இருப்பதையே மிகவும் விரும்புவீர்கள்.

குடும்பம்:

சிறு குழந்தையாக இருக்கும் போது அனைவரிடமும் மிகவும் பணிவாக இருப்பீர்கள். அதன் பிறகு உங்களிடம் விவரம் தெரிய விவரம் தெரிய பெற்றோர்களுக்கே அறிவுரை வழங்கும் தன்மை உங்களிடம் இருக்கும். அனைவரிடமும் பாசமாக இருப்பீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் மீது மிகவும் உயிராக இருப்பீர்கள். நண்பர்கள் கூட்டம் இவர்களுக்கு அதிகமாக இருக்காது. நூறில் ஒருவரை தான் தனக்கு நண்பராக தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும் உங்களது மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் உங்களுக்கு அதிகம் கோவம் வரும், எதற்கெடுத்தாலும் அதிகம் கோவம் படுவீர்கள்.

நோய்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு எப்பொழுது உஷ்ணம் சார்ந்த நோய்கள் ஏற்படும். அதேபோல் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு திசைகளும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிறங்களை பொறுத்தவரை ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், நீளம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும்.


வாழ்நாள் ஜாதகம் – கன்னி: 

கன்னி ராசிக்காரர் வாழ்க்கை முழுவது எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

குணம்:

இவர்களிடம் ஈர்ப்பு சக்தி இருக்கும். அதேபோல் மற்றவர்களிடம் இருக்கும் சிறப்பான குணங்களை மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவீர்கள். அனைவரையும் உங்கள் பேச்சு திறமையால் மயக்கிவிடுவீர்கள். கொடுப்பதில் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். பொதுவாக நீங்கள் ஏதாவது ஒரு சவால்களை எதிர்கொள்ளும் போதுதான் உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் வெளிவரும் அது வரை அமைதியாக தான் இருப்பீர்கள். கன்னியை பொறுத்தவரை குத்து சண்டை, புஜம் பலத்தை நிரூபிப்பது, போர் கலைகள் போன்று தொடர்புடையவற்றில் அதிகம் ஆர்வமாக இருப்பீர்கள்.

குடும்பம்;

பெருபாலும் கன்னி ராசிக்காரர்கள் அவரர்களது குடும்ப வாழ்க்கையான திருமணம், காதல் போன்றவற்றில் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை. இவர்கள் மிகவும் பொறுமைசாலி என்பதினால் அனைத்து விஷயங்களையும் சலித்துக்கொண்டு செல்வார்கள்.

தொழில்:

கன்னி ராசிக்காரர்கள் பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடியவர்கள். இருப்பினும் இவர்கள் செய்யும் தொழில் இவர்களை சுதந்திரமாக விட்டால் மட்டுமே அவற்றில் வெற்றி பெறுவார்கள். சும்மா சும்மா ஏதாவது தொந்தரவு கொடுத்தால் அவற்றை சரியாக செய்து முடிக்கமாட்டார்கள்.

நோய்:

கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய வகையான உடல் உபாதைகள் ஏற்படும். இருப்பினும் உங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறையை சரியாக எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகள் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நிறங்களை பொறுத்தவரை நீளம், பச்சை, கிரேக்கலர் போன்றவை அதிர்ஷ்டமானதாக இருக்கும்.


வாழ்நாள் ஜாதகம் – துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் ஜாதகம் எப்படி இருக்கும்.

குணம்:

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக நியாயம், தர்மம், சத்தியம், உண்மை போன்றவற்றிற்கு உரியவர் என்று சொல்லலாம். தனது உறவுகளை எப்பொழுதுமே அன்பாக பார்த்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்களது உடல் அமைப்பு மிகவும் அழகானதாக இருக்கும். மேலும் இவர்களுக்கு பணம் சம்பாதிப்பதில், பொருள் சேர்ப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கும். தனது மகிழ்ச்சிக்காக அனைத்து விஷயங்களையும் செய்யக்கூடியவர்கள்.

திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை :

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக தனக்கு பிடித்தவர்களை மட்டுமே காதலிக்கவோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ விரும்பிவர்கள். அதாவது ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் உணர்வு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தொழில்:

அரசியல், நிதி துறை, மீடியா, கலைத்துறை போன்றவற்றை சிறந்து விளங்க கூடியவர்கள். மேலும் இவர்களுக்கு சிறு தொழில் செய்வதில் அதிகம் விருப்பம் இருக்காது. எதுவாக இருந்தாலும் பெரிய அளவிலான தொழில்களை செய்யவே விரும்புவார்கள்.

நோய்:

இவர்களுக்கு வயிற்று சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்தால் அவற்றை அலட்சியம் செய்யாமல் அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்வது சிறந்தது.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

துலாம் ராசிக்காரர்கள் மேற்கு திசையை நோக்கி பயன் செல்வதன் மூலம் வெற்றிகள் கிடைக்கும். நிறங்கள் பொறுத்தவரை நல்ல வெளிர் நிறம் அதாவது வெள்ளை, ஸ்கை புழு, ஓசன் புழு, பிங் போன்ற நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.


வாழ்நாள் ஜாதகம் – விருச்சகம்:

பொதுவாக விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிக ஆசைகள் இருக்கும். இருப்பினும் அந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு நிறைய நாட்கள், நிறைய மாதங்கள், நிறைய வருடங்கள் கூட ஆகலாம். உடனே அவர்களது ஆசைகள் நிறைவேறாது. அதிக கஷ்டங்கள்படும் ராசி என்றால் அது விருச்சிகம் ராசி என்று சொல்லலாம். அவர்களது வாழ்க்கையில் அதிக துயரங்கள் மற்றும் கஷ்டங்களை சந்திக்கக்கூடியவர்கள் விருச்சிகம் ராசியினர். இருப்பினும் எவ்வளவு கஷ்டம் படுகிறீர்களோ அதைவிட வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். விருச்சிகம் ராசிக்காரர்கள்  நண்பர்களுக்கு மிகவும் உண்மையாக இருப்பார்கள்.

குடும்பம்:

குடும்பத்தில் அதிக பாசமாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்காது. அப்படியே நீங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் உங்கள் வாழ்க்கை சிற்பமாக இருக்காது.

தொழில்:

விருச்சிகம் ராசிக்காரர்கள் பொதுவாக நீர் சம்பந்தப்பட்ட தொழில், கடல் சம்பந்தப்பட்ட தொழில், அரசியல், அரசு வேலையில் இருப்பது போன்றவற்றில் அதிகம் ஆர்வம் இருக்கும்.

நோய்:

விருச்சிகம் ராசிக்காரர்கள் பொதுவாக முதுதண்டு வளம், இடுப்பு போன்ற பகுதிகளில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே தினமும் யோக பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை மற்றும் நிறம்:

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வடக்கு திசை மிகவும் சாதகமானதாக இருக்கும். மேலும் சிவந்த நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

மேலும் இதன் தொடர்ச்சியை நாளை பார்க்கலாம் நன்றி வணக்கம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்