விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திரங்கள் | Vilakku Sastram

Vilakku Sastram

விளக்கு ஏற்றுவதில் உள்ள முக்கியமான விஷயங்கள் | Vilakku sastram in Tamil 

வீட்டில் ஒரு நல்ல நாளில் அனைவரும் கடைப்பிடிக்கும் பழக்கத்தில் ஒன்று விளக்கேற்றுவது. விளக்கு ஏற்றும் போது பெண்கள் கடவுளை மனதில் முழுமையாக நினைத்து கொண்டு ஏற்ற வேண்டும். பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று கடமைக்கு சாமி கும்பிடக்கூடாது. விளக்கு ஏற்றும் போது சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அப்படி என்ன சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தீபம் ஏற்றும்போது கூற வேண்டிய மந்திரம்:

விளக்கு சாஸ்திரம்

  • விளக்கு ஏற்றும்போது ‘ஓம் ஒளிர் வளர் விளக்கே போற்றி’ எனும் மந்திரத்தை கூறிக்கொண்டே ஏற்ற வேண்டும்.
  • விளக்கை அணைக்கும் போது ஓம் சாந்த சொரூபினியே நமஹ’ மந்திரத்தை கூறி அணைக்க வேண்டும். பூவால் விளக்கை அணைத்தால் நல்ல பலன்களை பெற முடியும்.
  • எல்லோர் வீட்டிலும் விளக்கு கிழக்கு பார்த்து தான் இருக்கும். சாமி கும்பிடும் போது வடக்குப் பக்கம் பார்த்து கும்பிட வேண்டும். விளக்கு எரியும் போது அதற்கு நேராக நின்று சாமி கும்பிடக்கூடாது.

விளக்கு கழுவும் நாட்கள்:

Vilakku sastram in Tamil 

  • விளக்கு சாஸ்திரம்: பூஜை ஜாமான்களை சுத்தம் செய்யும் போது இரசாயனம் கலந்த செயற்கை பொருட்களை உபயோகப்படுத்தாமல் சாம்பல், உமி, தவிடு, சீயக்காய், புளி, எலுமிச்சை, செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
  • ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விளக்கை துலக்குவது நல்லது. செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் லட்சமி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.

தீபம் ஏற்றும் முறை:

vilakku

  • விளக்கு சாஸ்திரம்: தீபம் ஏற்றும் போது திரி இரட்டையாக இருக்க வேண்டும். இந்த இரட்டை திரியும் ஒன்றோடு ஒன்று சமமாக இருக்க வேண்டும். ஏறியும், இறங்கியும் இருக்க கூடாது.
  • குளித்துவிட்டு ஈர உடம்புடன் அல்லது ஈர துணியை கட்டிக்கொண்டு விளக்கு ஏற்ற கூடாது. ஆண்கள், பெண்கள் இருவரும் இதை தவிர்ப்பது நல்லது.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்களுக்கு விளக்கு ஏற்ற கூடாது.

விளக்கு ஏற்றும் நேரம்:

விளக்கு சாஸ்திரம்

  • Vilakku Sastram: தீபம் ஏற்றும் போது எப்போதும் ஒரே நேரத்தை கடைப்பிடியுங்கள். உதாரணத்திற்கு 6 மணிக்கு விளக்கு ஏற்றினால் அதே நேரத்தை கடைப்பிடியுங்கள்.
  • ஏனெனில் முதல் நாள் நீங்கள் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினீர்களோ அதே நேரத்தில் தான் கடவுள் வருகை தருவார்கள். நீங்கள் வேறு நேரத்தில் தீபம் ஏற்றினால் கடவுள் வருகை தரமாட்டார்கள்.
  • காமாட்சி விளக்கு முகம் தேய்ந்து இருந்தாலோ, முகம் தெரியவில்லை என்றாலோ விளக்கை மாற்றி, புதிய விளக்கில் கடவுளை வழிப்பட்டால் நல்ல பலன்களை பெற முடியும்.

விளக்கு சாஸ்திரம்:

Vilakku sastram in Tamil 

  • Vilakku Sastram: வீட்டில் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது பக்கத்து வீட்டில் சண்டை ஏற்பட்டாலோ அப்போது விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் சண்டை ஏற்பட்ட நேரத்தில் கடும்கோபத்தில் இருப்போம். அப்போது நம் மனதில் இருந்து வெளிவரும் வார்த்தை பழித்துவிடும். அதனால் கோபத்தில் இருக்கும் போது விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது.
  • விளக்கு ஏற்றும்பொழுது எப்பொழுதும் மனதை நிதானமாக வைத்து கொண்டு, கடவுளை மனதார நினைத்து வழிபட்டால் நல்ல பலன்களை பெற முடியும்.
விளக்கு வகைகள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்