வீடு கட்ட எளிய பரிகாரம்
வணக்கம் நண்பர்களே. இன்று நம் ஆன்மிகம் பதிவில் முக்கியமான பதிவுகளை பற்றி பார்க்கப்போகிறோம். அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது பெரிய கனவாக இருக்கும். அந்த வீட்டை கட்ட ஆரம்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று சும்மாவா சொல்லிருக்காக பெரியவங்க “வீட்டை கட்டி பார், கல்யாணத்தை பண்ணிபாருனு” வீடு கட்ட முடிவு எடுத்தாலே தொடக்கம் முதல் இறுதி வரை கவனமாக செய்யவேண்டும். ஒரு வீடு கட்டிமுடிப்பதொன்றும் அவ்வளவு சுலபமில்லை. அப்படி ஏதேனும் பிரச்சனை வந்தால் அதற்கு பரிகாரம் என்று சொல்வார்கள். அதில் உள்ள பரிகாரத்தை பற்றி பார்க்க போகிறோம்.
வீடு கட்டுவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்:
சொந்தமாக வீடு கட்டி குடிபோக வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். சொந்தமாக நிலம் இல்லை அதனால் வீடு கட்ட முடியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அதே சமயம் சொந்தமாக நிலம் இருக்கிறது ஆனால் வீடு தான் கட்ட முடியவில்லை என்றும் கூறுகிறார்கள். காசு, பணம், சொத்துக்கள் அதிகம் இருக்கும். ஆனால் வீடு கட்ட முடியவில்லை. எந்த முயற்சிகள் எடுத்தாலும் அது தடங்களாவே முடிகிறது. இதற்கு என்ன காரணம். தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடிபோவதற்கு என்ன செய்ய வேண்டும். என்ன பரிகாரம் செய்தால் வீடுகட்டி முடிக்கலாம்..? என்று பல கேள்விகள் இருக்கும். இந்த பதிவில் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று கவலைப்படுபவர்களுக்கு விரைவில் உங்கள் நிலத்தில் வீடுகட்டி குடி போகவும், அதற்கு வரக்கூடிய தடைகள் நீங்கவும், எந்தவொரு கடன் தொல்லை இல்லாமலும் சந்தோஷமாக வீடுகட்டி குடி போவதற்கு எளிய பரிகாரம் இதோ…
விரைவில் வீடு கட்ட:
- செவ்வாய் பகவான் பூமிகாரகனாக இருக்க கூடியவர். செவ்வாய் பகவானை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் தொடர்ந்து வழிபட்டு வருவதால் உங்களுக்கு வீடு கட்டும் யோகம் கிடைக்கும். மேலும், செவ்வாய் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு நிற வஸ்திரம் வாங்கி கொடுப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.
- அதேபோல், வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர பாகவனை வழிபட்டு வருவதால் வீடு கட்டும் முயற்சி சிறப்பாக இருக்கும். வெள்ளை நிற வஸ்திரம் வாங்கி சுக்கிரபாகவனுக்கு சாற்றவேண்டும். இதனால் நன்மைகள் உண்டாகும்.
- முருகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் வீடு கட்டும் யோகம் கிடைக்கிறது. வாரம் ஒருமுறை முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வழிபட்டு வாருங்கள்.
- மேலும், உங்கள் நிலத்தில் உள்ள மண்ணை எடுத்து ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து அதனுடன் 1 ருபாய் நாணயத்தை வைத்து கட்டி அதை உங்கள் பூஜை அறையில் வைத்து கொள்ளவும். தினந்தோறும் அதற்கு பூஜை செய்து வழிபடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் நீங்களும் உங்களின் நிலத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அழகிய வீடு கட்டி மகிழலாம்.
கேட்ட வரம் தரும் வெள்ளிக்கிழமை ராகு கால பலன்கள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |