வீடு சுத்தம் செய்ய உகந்த நாள்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீடு துடைக்க உகந்த நாள் மற்றும் உகந்த நேரம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு வீடு எப்போது துடைக்க வேண்டும்.? எப்போது துடைக்க கூடாது என்று தெரிவதில்லை. ஆகையால். அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் வீடு சுத்தம் செய்ய உகந்த நாள் (வீடு துடைக்க உகந்த நாள்) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாரத்தில் மொத்தம் 7 நாட்கள் இருக்கிறது. இந்த ஏழு நாட்களில் 1 நாளாவது வீட்டை சுத்தம் செய்து வீடு துடைப்பார்கள். இதுவே வீட்டில் இருக்கக்கூடிய பெண்களாக இருந்தால் வாரத்தில் இரண்டு முறை வீடு துடைப்பார்கள். வீடு துடைப்பது என்பது முக்கியம் அல்ல. அதனை எந்த நாளில் துடைப்பது என்பது தான் முக்கியம். ஒரு சில நாட்களில் வீடு துடைத்தால் வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் கொள்ள மாட்டாள் என்று நம் முன்னோர்கள் கூற அறிந்து இருப்போம். அந்த கிழமை எந்த கிழமை.? ஏன் அந்த நாட்களில் வீடு துடைக்கக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வீடு கட்ட உகந்த மாதம் எது தெரியுமா.?
வீடு துடைக்க உகந்த நாள்:
வீடு துடைக்க உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழன்கிழமை மற்றும் சனிக்கிழமை உள்ளது. அதாவது, செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் வீடு துடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
வீடு துடைக்கும் நேரம்:
வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் வீடு துடைக்கும் போது இந்த நேரத்தில் வீடு துடைக்க வேண்டும். அதாவது, காலை வேளையிலும் மாலையில் 5 மணிக்குள்ளாகவும் வீட்டை துடைக்க வேண்டும்.
ஏன் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையில் வீடு துடைக்கக்கூடாது.?
வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையில் லட்சுமி தேவியை வணங்க உரிய நாளாக இருக்கிறது. லட்சுமி தேவி மட்டுமின்றி அனைத்து கடவுள்களையும் இந்த இரண்டு நாட்களில் வணங்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது, பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும். அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கடவுளை வணங்குவதன் மூலம் எல்லா வகையிலும் நமக்கு நன்மை உண்டாகும். வீட்டில் செல்வ வளம் பெருகும், துன்பங்கள் நீங்கும், ஆரோக்கியமான வாழ்வு அமையும். இப்படி ஏராளமான நன்மைகளை பெறலாம்.
அப்படி இருக்கும் பட்சத்தில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தால் பூஜைக்கான நேரம் தவறிவிடும். அதாவது, சூரிய உதயத்திற்கு முன்பாக பூஜை செய்ய முடியாது. இதனால், தான் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யலாம் அதற்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து துடைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளார்கள்.
வாடகை வீடு குடி போக உகந்த மாதம் 2024
அமாவாசையன்று வீடு துடைக்கலாமா.?
அமாவாசையன்று அன்று வீடு துடைக்கக்கூடாது. அமாவாசைக்கு முந்தைய நாளே வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |