வௌவால் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் வௌவால் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வௌவால் முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பறக்கும் பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தகைய வௌவால் வீட்டுக்குள் நுழைந்தால் என்ன பலன் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
வெளவால் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?
🦇 வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதல்ல. ஏனெனில், பாழடைந்த வீடுகள் மற்றும் கோவில்களில் வெளவால்கள் வாழும்.
🦇 வாயினால் புரளி பேசி சாபம் பெற்றவர்களே அடுத்த பிறவியில் வெளவால்களாக பிறக்கின்றனர்.
🦇 ஆகவே, வீடுகளில் வெளவால்கள் வசித்தால் வீடுகள் பாழடைய வாய்ப்புகள் உண்டு.
வௌவால் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்?
வீட்டுக்குள் வெளிச்சமும் மனித நடமாட்டமும் இல்லாமல் இருந்தால் வௌவால்கள் வந்து வசிப்பிடம் ஆக்கிவிடும். அப்படி ஏதும் இரைகளை விரட்டி வந்தாலும் அவை உடனே திரும்பிச் சென்று விடும்.
வௌவால்கள் பழம் உண்ண மரங்களை நாடி வாழும் இனம் என்பதால் அவை மக்கள் வாழும் பகுதிகளில் வாழுகின்றன். பகலில் அவை அடர்ந்த மரங்களில் அல்லது பாழடைந்த இருள் நிறைந்த வீடுகள் கோயில்களில் தங்கி இருந்து இரவு நேரங்களில் இரை தேடிச் செல்கின்றன.
வௌவால் வீட்டுக்குள் வந்தால்?
வௌவால்கள் ஏராளமான செல்வத்தின் சின்னம் என்று சீனர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இந்து சம்பிரதாயப்படி வௌவால் வீட்டுக்குள் நுழைந்தால் துரதிருஷ்டம் என்று நம்பப்படுகிறது. ஆனால் வௌவால் உங்கள் வீட்டுக்குள் கூடு கட்டினால் நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
எனவே இதில் சகுனம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. பகுத்தறிவும் தன்னம்பிக்கையும் தான் நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லாம் எண்ணம் தான் காரணம். நாம் நல்லதாக நினைத்தாள் நல்ல விஷயங்கள் நடக்கும்.. இல்லை கெட்டதாக நினைத்தால் கெட்ட விஷயங்கள் நிகழலாம்.
ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்று சொல்ல காரணம் என்ன?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |