திருமணத்திற்கு பார்க்கும் 10 பொருத்தத்தில் எந்த பொருத்தம் அவசியம்..!

Advertisement

10 சிறந்த திருமண பொருத்தம் | 10 porutham for marriage in tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக திருமணம் செய்யும் போது 10 பொருத்தங்கள் பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த பத்து பொருத்தம் என்றால் என்ன? இந்த பத்து பொருத்தத்தில் எதனை பொருத்தம் கண்டிப்பாக பொருத்தமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதில் நாம் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

1 தினப்பொருத்தம்:

முதன்மையாக பார்க்கப்படுவது தினப்பொருத்தம் ஆகும். இந்த தினப்பொருத்தம் என்பது ஆயுள், ஆரோக்கியம் தினசரி இருவருடைய வாழ்வில் இருக்குடிய பொருத்தம் ஆகும். தினப்பொருத்தம் அவசியமாக பார்க்கப்படும் பொருத்தமாக உள்ளது. கணவன் மனைவி உறவுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2 கணப் பொருத்தம்:

ஆண், பெண் ஆகிய இவருடைய மன இயல்புகள் ஒற்றுபோகுமா என்பது குறித்து கணப்பொருத்தம் குறிக்கும். மங்களம் பொருந்திய வாழ்கை அமைய வேண்டுமானால் திருமணம் செய்ய இருக்கும் ஆண் பெண் இருவருக்கும் கணப்பொருத்தம் அவசியமாக இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருமண பெயர் பொருத்தம்

3 மகேந்திர பொருத்தம்:

செல்வ பாக்கியத்தையும், ஆரோக்கிய வாழ்க்கையையும் குறிப்பிடுவது மகேந்திர பொருத்தம் ஆகும்.

4 ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

மணப்பெண்ணின் ஆயுள் பலத்தை குறிப்பிடுவது ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் ஆகும்.

5 யோனி பொருத்தம்:

சிற்றின்ப வேற்கையின் அளவை குறிப்பிடுவது யோனி பொருத்தம் ஆகும். தம்பதியா வாழ்க்கையில் திருப்தி கிடைக்குமா என்பதை இந்த பொருத்தத்தை கொண்டு சோதிக்க முடியும்.

6 ராசி பொருத்தம்:

மணமக்களின் சந்ததி வளர்ச்சியையும், இருவரின் ஒத்திசையான வாழ்க்கையையும் குறிப்பிடுவது ராசி பொருத்தம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முக்கிய திருமண பொருத்தம்..!

7 ராசி அதிபதி பொருத்தம்:

தம்பதிக்குள் உள்ள கருத்து ஒற்றுமை, கருத்து வேற்றுமை, வம்ச விருத்தியை இந்த ராசி அதிபசி பொருத்தம் குறிக்கும்.

8 வசிய பொருத்தம்:

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஒருவர் பால் ஒருவர் மீது ஈர்ப்பை குறிப்பிடுவது வசிய பொருத்தம் ஆகும்

9 ரஜ்ஜு பொருத்தம்:

மணமாகும் பெண்ணின் மாங்கல்யம் பலத்தை குறிப்பிடுவது ரஜ்ஜு பொருத்தம் ஆகும். ரஜ்ஜு என்றால் கயிறு என்று பொருள் அதனை நாம் மாங்கல்யம் என்று அழைக்கிறோம்

10 வேதை பொருத்தம்:

தம்பதியர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்வை குறிப்பிடுவது வேதை பொருத்தம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?

10 பொருத்தங்கள் பார்த்தும் திருமணத்தில் முறிவை சந்திக்க காரணம் உள்வினை ஆகும். அந்த உள்வினை தம்பதிகளின் ஜாதக பொருத்தத்தை ஒப்பிட்டு கணிக்க இயலும் ஆக 10 பொருத்தங்களுமே திருமணம் செய்வதற்கு தகுதியுடைவை என்று நினைப்பது தவறான விஷயம் ஆகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement