108 ஹோம மூலிகைகள் பெயர்கள்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 108 ஹோம திரவியங்கள் பெயர்கள் (108 Homa Thiraviyam in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஹோமத்தில் நிறைய பொருட்களை போது ஹோமம் வளர்ப்பார்கள். ஆனால், அந்த 108 மூலிகைகளின் பெயர்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் 108 ஹோம மூலிகைகள் பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு ஆகும். அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் போன்றவை ஆகும். ஹோம திரவியங்கள் என்பது எல்லா ஹோமங்களுக்கும் பயன்படுத்தப்படும் மூலிகை பொருள் ஆகும்.
108 Homa Thiraviyam in Tamil:
1.அருகம்புல்
2.அரசு
3.ஆல்
4.அத்தி
5.வில்வம்
6.துளசி
7.வேம்பு
8.செந்நாயுருவி
.9.திருக்கொடி (வேலிப்பருத்தி)
10. இலுப்பை
11.கருங்காலி
12.அகில்
13.சந்தனம்
14.தேவதாரு
15.முந்திரி
16.புங்கன்
17.மா
18.பலா
19.புனுகு
20.ஜவ்வாது
21.கஸ்தூரி
22.கோராசனை
23. குங்குமப்பூ
24.கோஷ்டம்
25.வெண்கடுகு
26. குங்கிலியம்
27.தாசங்கம்
28.சாம்பிராணி
29.துகிலி
30.மருதாணி விதை
31.திருநீற்றுப்பச்சிலை
32.கற்பூரவள்ளி
33.நொச்சி
34.ஆவாரை
35.குப்பைமேனி.
36. தும்பை
37.தூதுவளை
38.வலம்புரிக்காய்
39.இடம்புரி காய்
40.கரிசலாங்கன்னி
41.கோதுமை
42.நெல்
43.துவரை
44.பாசிப்பயறு
45. கொண்டைக்கடலை
46.மொச்சை
47.எள்
48.உளுந்து
49.கொள்ளு
50.மைகாசி
51.விலாமிச்சை வேர்
52.வெட்டிவேர்
53.நன்னாரிவேர்
54.வெள்ளெருகு
55.நாய்க்கடுகு
56.ஏலக்காய்
57.கிராம்பு
58.சுக்கு
59.மிளகு
60.திப்பிலி
61.ஓமம்
62.சீரகம்
63.கடுகு
64.வெந்தயம்
65.கருஞ்சீரகம்
66.சதகுப்பை
67.வசம்பு
68.கடுக்காய்
69.நெல்லிக்காய்
70.தான்றிக்காய்
71.மஞ்சள்
72.அதிவிடயம்
73.சிறுதேக்கு
74.அரத்தை
75.அதிமதுரம்
76.கடுகுரோகிணி
77.புளி
78.வாய்விளங்கம்
79. கீச்சிலி கிழங்கு
80.கர்கடகசிங்கி
81.காற்போக அரிசி
82.வாலுழுவை அரிசி
83.பெருங்காயம்
84.சேங்கொட்டை
85.தாளிசபத்திரி
86.சாதிபத்திரி
87.சிறுநாகப்பூ
88.சடாமாஞ்சில்
89.நேர்வாளம்
90.மெழுகு
91.குந்திரிக்கம்
92.பாக்கு
93.சித்திரமூலம்
94.திப்பிலிமூலம்
95.சாதிக்காய்
96.யானை திப்பிலி
97.கருங்கொடிவேலி
98.செவ்வியம்
99.காட்டு சதகுப்பை
100.மரமஞ்சள்
101.மஞ்சிட்டி
102.சிறுவாலுழுவை
103.நிலாவிரை
104.பேரீச்சங்காய்
105.இலவங்கப்பட்டை
106.இலவங்கப் பூ
107. இலவங்கப்பத்திரி
108.மாசிக்காய்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |