108 எண்ணின் அதிசய சக்தி பற்றி தெரியுமா ?

Advertisement

Do You Know About The Miraculous Power Of The Number 108 In Tamil

நம் வாழ்வில் 108 என்ற எண் நிறைய இடங்களில் காணப்படும். கோவிலுக்கு சென்றால் 108 ஸ்லோகம் சொல்வது, தியானத்தின் போது 108 முறை மந்திரம் கூறுவது. என எல்லா ஆன்மீக ரீதியாக நாம் இந்த 108 எண்ணை அனுகிருப்போம். ஆனால் 108 எண்ணின் அதிசயத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ? தெரியாமலேயே 108 எண்ணை நாம் ஆன்மீக ரீதியாக பயன்படுத்தி வருகிறோம். இந்த 108 எண்ணின் பின்னால் உள்ள அதிசயங்கள் உண்மை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

108 பின்னால் உள்ள ரகசியம் : 

108 number in tamil

108 எண்ணானது இந்து மதம் மற்றும் புத்த மதத்தில் புனிதமான ஒரு எண்ணாக கருதப்படுகிறது. நான்கு திசைகளிலும் உள்ள 27 நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கூட்டினால் 108 வரும். உத்திரகாண்டில் சிவசன்னதிகள் 108 அமைந்துள்ளன. முத்திநாத் என்னும் மலைசார்ந்த இடத்தில மொத்தம் 108 நீரூற்றுகள் இருக்கின்றன. வேதங்களும் 108 எண்ணை கொண்டு தான் அமைந்துள்ளன. ரிக் வேதம் 10, யஜூர் வேதம் 51, சாம வேதம் 16, அதர்வண வேதம் 31 மொத்தமாக கூட்டினால் 108 வேதங்களை உள்ளடக்கியது.

நம் உடலில் காணப்படும் 108 :

சராசரியாக மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சி வெளியிடுகிறான். அதுவே ஒரு மணிநேரத்திற்கு 900 முறையும், ஒரு நாளைக்கு 21, 600 முறையும் இதனை இரவு பகலுக்கும் பாதியாக பிரித்தால் 10,800 வருகிறது.

108 டிகிரி பேரன்ஹீட்டர் அளவில் இருந்தால் தான் நம் உடலில் இருக்கும் செல்கள் உயிரோடு இருக்குமாம்.  108 டிகிரி பேரன்ஹீட்டர் வெப்பத்தை தான் நாம் உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சராசரி நிலை. இதை தாண்டினால் நம் உடலில் இருக்கும் செல்கள் இறந்து விடுமாம். நம் உடலின் சராசரியான பிரஷர் பாயிண்ட் கூட 108 அளவில் தான் உள்ளது.

சீக்கிய மதம் மற்றும் புத்த மதம் கூறும் 108 :

பொதுவாக புத்தர்கள் முத்தி அடைய 108 படிகளை கடந்தாக வேண்டும். சீக்கிய மதம் மற்றும் புத்த மதத்தில் பயன்படுத்தும் ஜெப மாலைகளின் எண்ணிக்கை 108 ஆகும். சீக்கிய மதம் மற்றும் புத்த மதங்களில் 108 எண்ணை தியானம் மற்றும் ஸ்லோகங்களுக்காகவும் 108 முறை  கூறுவதற்காகாகவும்  பயன்படுத்துகிறர்கள். இந்த எண்ணில் அதிக ஆற்றல்கள் இருப்பதாக சீக்கியம் மற்றும் புத்த மதத்தில் நம்பப்படுகிறது.

பிரபஞ்ச சக்தி :

இந்த 108 எண்ணானது ஆன்மிகம் ரீதியாக மட்டுமில்லாமல் பிரபஞ்ச ஆற்றலோடும் தொடர்புடையது. பொதுவாக ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு அதிர்வலையும் ஆற்றலும் உண்டு. 108 எண்ணில் பிரபஞ்ச ஆற்றல் அதிகாமாக இருப்பதால் தான் ஆன்மீக ரீதியாக அதனை பயன்படுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது.

 

அம்மன் 108 போற்றி மந்திரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement