12 ராசி அதிபதிகள் | 12 Rasi Athipathi in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் 12 ரசிகளுக்கான கடவுள்களும் அதிபதி கிரகங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக ஆன்மீகத்தில் 12 ராசிகளும் அதற்கான 27 நட்சத்திரங்களும் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், 12 ராசிக்குரிய கடவுள்களும், அதிபதி கிரகங்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
ஒருவருக்கு ராசியும் நட்சத்திரமும் மிகவும் முக்கியம். இந்த 12 ராசிகளை ஆதிக்கம் செலுத்தும் கடவுள்களும் கிரகங்களும் உள்ளது. இவ்வாறு ராசிக்கான கடவுளையும் கிரகங்களையும் வழிபடுவதன் மூலம் வாழ்வில் நற்பலன்களை பெறலாம் என்பது நம் முன்னோர்கள் வகுத்து சென்றுள்ள பதிவு ஆகும். ஆகையால், அதன்படி நாமும் வழிபட்டு வந்தால் நல்லதே நடக்கும். ஓகே வாருங்கள் 12 ராசிக்கான கடவுள்களையும் அதிபதி கிரகங்களையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ராசி அதிபதி கடவுள் |12 Rasi Athipathi:
வ.எண் | ராசிகள் | கடவுள் | அதிபதி கிரகம் |
1 | மேஷம் | முருகன் | செவ்வாய் |
2 | ரிஷபம் | மஹாலட்சுமி | சுக்கிரன் |
3 | மிதுனம் | மஹாவிஷ்ணு | புதன் |
4 | கடகம் | அம்மன்/அம்பாள் | சந்திரன் |
5 | சிம்மம் | சிவபெருமான் | சூரியன் |
6 | கன்னி | ஸ்ரீமன் நாராயணன் | புதன் |
7 | துலாம் | மகாலட்சுமி | சுக்கிரன் |
8 | விருச்சிகம் | முருகப்பெருமான் | செவ்வாய் |
9 | தனுசு | தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு | குரு |
10 | மகரம் | சிவபெருமான் | சனி |
11 | கும்பம் | சிவபெருமான் | சனி |
12 | மீனம் | தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு | குரு |
மேற்கூறிய அட்டவணையின்படி, 12 ராசிகளும் அவற்றிக்குரிய கடவுள்களையும், அதிபதி கிரகங்களையும் வழிப்பட்டு வருவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றகரமான பலன்களை பெறலாம்.
செவ்வாய்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக திகழும் செவ்வாய், கிரகம் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் படைப்பாலனாக இருக்கிறார்.
சுக்கிரன்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசி அதிபதியாக திகழும் சுக்கிரன், கல்வி, புத்தி ஆகியவற்றிக்கு காரகனாக இருக்கிறார்.
புதன்:
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியாக திகழும் புதன், கல்வி மற்றும் புத்திக்கு காரகனாக இருக்கிறார்.
சந்திரன்:
கடக ராசிக்கு அதிபதியாக இருக்கும் சந்திரன் மனம் மற்றும் தாய்க்குக் காரகன் ஆவார்.
சூரியன்:
சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழும் சூரியன், உடல் , தந்தைக்குக் காரகனாக இருக்கிறார்.
குரு:
தனுசு மற்றும் மீனம் ராசியின் அதிபதியாக இருக்கும் குரு, தனம் மற்றும் புத்திர காரகன் ஆவார்.
சனி:
மகரம் மற்றும் கும்பம் ராசி அதிபதியாக இருக்கும் சனிபகவான்ஆயுள் மற்றும் தொழில் காரகன் ஆவார்.
தொடர்புடைய பதிவுகள் |
12 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட்டமான பூஜை அறை பொருட்கள் |
12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள் |
12 ராசிகளுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில லக்கி எழுத்துக்கள் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |