12 ராசிகளுக்கும் உகந்த பூஜை பொருள்
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் ஒவ்வொரு நாள் பொழுதிலும் தங்களுடைய ராசிகளுக்கு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போல் தங்களின் ராசிகளுக்கு உரிய எழுத்துக்கள், கற்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு உரிய பூஜை பொருட்கள் இருக்கின்றது அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
ராசிகளுக்கும் உகந்த பொருள்:
ராசிகள் | பொருள் |
மேஷம், விருச்சிகம் | சிவப்பு குங்குமம், துவரம்பருப்பு |
ரிஷபம், துலாம் | இலவங்கம், கற்கண்டு |
மிதுனம், கன்னி | கற்பூரம், பால் |
கடகம் | வலம்புரிச்சங்கு |
சிம்மம் | சந்தனகட்டை |
தனுசு, மீனம் | குண்டு மஞ்சள் அல்லது விரலி மஞ்சள் |
மகரம், கும்பம் | கருங்காலி கட்டை |
மேஷம் மற்றும் விருச்சிகம்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உகந்த பூஜை பொருட்களாக குங்கும சிமிழ் மற்றும் துவரம்பருப்பு இருக்கிறது. குங்கும சிமிழ் சிறிதளவு குங்குமத்தை சேர்த்து பூஜை அறையில் வைக்க வேண்டும். மண் பானையில் சிறிதளவு துவரம்பருப்பு சேர்த்து வைக்க வேண்டும். இது ;போல வைப்பதால் பணவர்கு அதிகரிக்கும்.
ரிஷபம் மற்றும் துலாம்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு கிண்ணத்தில் இலவங்கத்தை போட்டு தினமும் பூஜை செய்வதால் கடன் சுமையானது குறையும். மேலும் உங்கள் வாழ்க்கையானது மகிழ்ச்சியாக மாறும்.
மிதுனம் மற்றும் கன்னி:
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் பால் வைத்து பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் வீட்டில் பணம், பொருள் எல்லாம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்
கடகம்:
கடக ராசிக்காரர்கள் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து பூஜை செய்து வந்தால் நீங்கள் கேட்ட வரத்தை தருவாள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருளாக சந்தன கட்டை உள்ளது. இதனை நீங்கள் நெற்றியில் பொட்டாக வைத்து கொள்வதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தனுசு மற்றும் மீனம்:
தனுசு ராசிக்காரர்களுக்கு குண்டு மஞ்சள் அல்லது விரலி மஞ்சளை சேர்த்து பூஜை செய்யுங்கள். இப்படி செய்வதினால் உங்கள் வாழ்க்கையில் ஏதும் தடைபட்ட காரியங்கள் இருந்தால் அவை முடிவிற்கு வரும்.
மகரம் மற்றும் கும்பம்:
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் கருங்காலி கட்டையை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை வைத்து பூஜை செய்வதால் உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |